ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டிவிஎஸ் RTR 160 4V மாடல் பைக்குகள் அறிமுகம் - சிறப்பம்சங்கள், விலை குறித்த விவரம்

டிவிஎஸ் RTR 160 4V மாடல் பைக்குகள் அறிமுகம் - சிறப்பம்சங்கள், விலை குறித்த விவரம்

அப்பாச்சி

அப்பாச்சி

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி RTR 160 4V மாடலில் புதிய வேரியண்டான ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பண்டிகை காலங்கள் வரிசையாக வருவதால் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஜூபிடர் 125 அறிவித்த கையோடு, தற்போது அப்பாச்சி RTR 160 4V மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V உள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

  டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V மாடலில் புதிய ஹெட்லேம்ப் அசெம்பிளி டேக் டைம் ரன்னிங் லாம்ப் அதாவது டிஆர்எல் முறையை கொண்டு வந்துள்ளது. கிளட்ச், அலாய் வீல்கள் மற்றும் பிரேக் லீவர்ஸ் போன்றவைகளை எளிதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விதத்தில் பொருத்தி இருக்கிறார்கள்.

  டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி ஸ்பெஷல் எடிஷன் மூன்று விதமான மாடல்களில் கிடைக்கும். இந்த மாடல் வண்டியானது அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும். அப்பாச்சி ஆர்டிஆர் 160 4V இன் டாப்-எண்ட் வேரியன்ட்டில் ஸ்மார்ட் கன்னெக்ட் (TVS Smart ConnectTM) பொருத்தப்பட்டிருக்கும்.

  ஏற்கனவே கூறியது போல், ஒரு புதிய ஹெட்லேம்ப் அசெம்பிளி பொருத்தப்பட்டுள்ளது. அதில் டிஆர்எல் தொடர்ந்து ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் குறைந்த மற்றும் உயர் பீம் கொண்டு செயல்படுகிறது.

  இதுபற்றி பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிளின் தலைவர் மேகாஷ்யம் டிகோல், ‘விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து அதிநவீன தொழில்நுட்பத்தையும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி மாடலில் கொண்டு வந்திருக்கிறோம்.இது வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத புதுவித அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்’ என்று கூறினார்.

  டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி டிரம், சிங்கிள் டிஸ்க் மற்றும் ரியர் டிஸ்க் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள். ஆர்டிஆர் 160 4 வி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார் கம்பெனி டீலர்ஷிப்களில் கிடைக்கின்றது. டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட விலைப்பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி ஸ்பெஷல் எடிசன் ரூ .1,21,372-க்கும், ஆர்டிஆர் 160 4 வி டிரம் மாடல் ரூ 1,15,265-க்கும், ஆர்டிஆர் 160 4 வி சிங்கிள் டிஸ்க் ரூ .1,17,350-க்கும், ஆர்டிஆர் 160 4 வி ரியர் டிஸ்க் ரூ .1,20,050-க்கும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

  Published by:Karthick S
  First published:

  Tags: TVS