ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 இந்தியாவில் அறிமுகம் - விலை குறித்த விவரங்கள்!

2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 இந்தியாவில் அறிமுகம் - விலை குறித்த விவரங்கள்!

அப்பாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார் சைக்கிளில் 313 சிசி எஞ்சின் உள்ளது. இது 34 பிஎச்பி பவர் மற்றும் 27.3 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் பைக் அறிமுகம் செய்துள்ளது, இதன் விலை ரூ .2.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்பாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார் சைக்கிளில் 313 சிசி எஞ்சின் உள்ளது. இது 34 பிஎச்பி பவர் மற்றும் 27.3 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டார் சைக்கிளின் பிரீமியம் பதிப்பில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் சிஸ்டம், ட்ரிப் மீட்டர் மற்றும் டிஜிட்டல் டாக்குமெண்ட் ஸ்டோரேஜ், அதிவேகமாக சென்றால் இண்டிகேட் செய்யும் அம்சம் உள்ளன. மேலும் ஆர்ஆர் 310 இப்போது ஒரு டைனமிக் கிட்டுடன் வருகிறது, இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன், டி.வி.எஸ். யூரோக்ரிப் ப்ரோடார்க் எக்ஸ்டிரீம் ரப்பர் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது முன் மற்றும் பின்புறம் டயர்களில் சரியான பயணத்தை வழங்குகிறது

மோனோ-ஷாக் மற்றும் டவுன் போர்க் இரண்டையும் தேவைக்கேற்ப சரிசெய்யலாம் என்பதை இது குறிக்கிறது. தயாரிப்பாளர்களால் வழங்கப்பட்ட ரேஸ் கிட் அதிக பிடிப்பு ஹண்டில் பார்களை கொண்டுள்ளது. இந்த இரண்டு கருவிகளையும் தனித்தனியாக அல்லது பில்ட் டு ஆர்டர் திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ், வாங்குபவர் தங்கள் பைக்கை ஆர்டர் செய்யும் போது அப்ளை செய்யலாம்.

சமீபத்திய இதுகுறித்து பேட்டியளித்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள்ஸ் தலைவர் (மார்க்கெட்டிங்) மேகாஷ்யம் டிகோல், 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ய அப்பாச்சி மாடல் பைக், நாட்டின் ப்ரீமியம் தர மோட்டார் சைக்கிள் விற்பனையில் முதன்மை பெற்று வருகிறது. இந்த விற்பனையை மேலும் உயர்த்தும் நோக்கத்தோடு, இதனுடைய புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அப்பாச்சி ஆர்.ஆர். 310 பைக்கில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் சிறப்பாக வந்துள்ளன. நிச்சயம் ப்ரீமியம் பைக் செக்மென்டில் இந்த மாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறினார்.

Also read... ’மாத்தியோசி’ டொயோட்டா - மாருதி சுசூகி கூட்டணி... உருவாகிறது செல்ப் சார்ஜிங் EV கார்கள்!

பாதுகாப்பு மற்றும் அம்சங்களில் சமரசம் செய்யாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் விரும்பும் பைக்குகளை அனுபவிக்க முடிகிறதா? என்பதை உறுதி செய்வதே இந்த பைக்கை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். அப்பாச்சி மோட்டார் சைக்கிளின் புதிய மாடல் தனித்துவமான சவாரியை வழங்கும் என்றும், ஆன்லைன் முறையும் சிக்கலற்றதாக மாற்றப்பட்டுள்ளதால் அதிகமான மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் மற்றும் அவர்களின் கனவு பைக்கை சொந்தமாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

First published: