ரெனால்ட் ட்ரைபர் MPV விலை அறிவிப்பு - தொடக்க விலை ரூ.5.30 லட்சம்

ரெனால்ட் ட்ரைபர் MPV

2021 ஆம் ஆண்டுக்கான ரெனால்ட் ட்ரைபர் எம்.பி.வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி, அதன் விலை விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான புதிய எம்.பி.வி மாடல் மற்றும் அதன் விலை விவரத்தை வெளியிட்டுள்ளது.

பிரெஞ்சு நிறுவனமான ரெனால்ட் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் ரெனால்ட் எம்.பி.வி மாடலை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகின. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான ரெனால்ட் ட்ரைபர் எம்.பி.வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி, அதன் விலை விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

RxE MT மாடல் ரெனால்ட் ட்ரைபர் 5.3 லட்சம் ரூபாயில் இருந்து பல்வேறு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதற்கு முந்தைய மாடலைப்போன்று வடிவமைக்கப்பட்டு RXE, RXL, RXT மற்றும் RXZ என்ற நான்கு டிரிம்களில் கிடைக்கிறது. வெளிப்புற மெக்கானிக்கல் அமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் பெரிதாக இல்லையென்றாலும், உட்புறத்தில் பல புதிய அம்ச மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரையில், இது ஸ்டீயரிங் வீல் உடன் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள், டிரைவர் இருக்கை உயரம் சரிசெய்தல், அனைத்து வண்ண விருப்பங்களிலும் டூயல்-டோன் வெளிப்புறங்கள், புதிய வெளிப்புற வண்ணங்கள், LED டர்ன் இண்டிகேட்டர்ஸ் மற்றும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

Also read... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க போறீர்களா? இதோ சிறந்த ஸ்கூட்டர்கள் விவரம்

இந்த MPV யின் டாப்-எண்ட் மாடல்கள் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், காலநிலை கட்டுப்பாடு மற்றும் பல அம்சங்களைப் பெறுகின்றது. காரின் இயந்திர அமைப்பு மாறாமல் உள்ளது. இது அதே 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது, இது ஐந்து வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் தரமாக ஒரு கூடுதலாக AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் 70 bhp மற்றும் 96 Nm ஆற்றலை உற்பத்திச் செய்கிறது.

மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இருக்கும் RxL வேரியண்ட் 5.99 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே வேரியண்ட் ஆட்டோமேடிக்காக இருந்தால் 6.5 லட்சம் ரூபாய் விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. டாப் என்ட் வேரியண்டுகளான RXT AMT மாடல் கார்கள் எக்ஸ் ஷோரூம் விலையில் 7.05 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட்டின் டர்போ மாடல் கார்களுக்கும் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த கார்கள் குறித்த அறிவிப்பை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த கார் குறித்த அறிவிப்பு தாமதமாவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு விருப்பமான டூயல் கலர் வேண்டுமென்றால் கூடுதலாக 17,000 செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ள ரெனால்ட், Cedar Brown கலரில் புதிய ரெனால்ட் டிரைபரையும் அறிமுகப்படுத்தியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: