இந்தியாவில் அறிமுகமானது ரெனால்ட் க்விட் வாகனம்... அதுவும் பட்ஜெட் விலையில்!

ரெனால்ட் க்விட்

புதிய அறிமுகத்தோடு, ரெனால்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

  • Share this:
ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய "2021 க்விட்" (Kwid ) நுழைவு நிலை ஹேட்ச்பேக் வாகனத்தை ரூ.4.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரெனால்ட் க்விட் MY21 ரேஞ்ச் வாகனங்கள் 0.8L மற்றும் 1.0L SCe பவர்டிரெயின்களில் மேனுவல் மற்றும் AMT விருப்பங்களுடன் விற்பனைக்கு வருகிறது. ரெனால்ட் KWID ரேன்ஞ் வாகனங்களின் அனைத்து வகைகளிலும் இப்போது ஒரு நிலையான அம்சமாக டூயல் ஃபிரண்ட் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "2021 ரெனால்ட் க்விட்" ரேன்ஞ் மாடல்களின் விலை பட்டியலை பின்வருமாறு காணலாம்.

Renault KWID RXE 0.8L - ரூ. 4,06,500

Renault KWID RXL 0.8L - ரூ 4,36,500

Renault KWID RXT 0.8L - ரூ. 4,66,500

Renault KWID RXL 1.0L MT - ரூ .4,53,600

Renault KWID RXL 1.0L EASY -R - ரூ .4,93,600

Renault KWID RXT 1.0L MT OPTION- ரூ .4,90,300

Renault KWID CLIMBER 1.0L EASY-R OPTION - ரூ .5,11,500

Renault KWID RXT 1.0L EASY- R OPTION - ரூ .5,30,300

Renault KWID CLIMBER 1.0L EASY-R OPTION - ரூ .5,51,500

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய க்விட் MY21 க்ளைம்பர் எடிஷன் வெளிப்புறத்தில் டூயல் டோன் நிறத்தில் வருகிறது. அதாவது வெள்ளை நிறத்தில் கருப்பு ரூஃப்புடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், எலக்ட்ரிக் ஓஆர்விஎம் மற்றும் டே அண்ட் நைட் ஐஆர்விஎம் போன்ற புதிய அம்சங்களுடன் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர பல செயலில் உள்ள மற்றும் செயலற்ற பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதலாக, இது ஃபிரண்ட் டிரைவர் சைடு பைரோடெக் மற்றும் ப்ரெடென்ஷனரையும் கொண்டுள்ளது.

மேலும் புதிய அறிமுகத்தோடு, ரெனால்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் மாதத்தில் அதன் தயாரிப்பு ரேன்ஞ்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகன மாடல்களுக்கு அதிகபட்சம் INR 80,000 வரை நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இந்த காலகட்டத்தில் புதிய ரெனால்ட் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் கிடைக்கும்.

Also read... நிறுவனத்தின் மிகச்சிறிய SUV பற்றிய தகவல்களை வெளியிட்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் - இந்தியாவில் எப்போது அறிமுகம்?

மேலும் ரொக்க சலுகைகள் மற்றும் லாயல்டி போனஸ் வடிவத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகளைத் தவிர, KWID, TRIBER மற்றும் KIGER வாகனங்களை வாங்குவதற்கான Buy Now, Pay in 2022 திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு புதிய ரெனால்ட் வாகனத்தைத் தேர்வு செய்தால், 6 மாதங்களுக்குப் பிறகு அதற்கான EMI-ஐ செலுத்தத் தொடங்கலாம். வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, செப்டம்பர் 1 முதல் 10ம் தேதி வரை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவாவில் தனது வாடிக்கையாளர்களுக்கு, ரெனால்ட் இந்தியா குறிப்பிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: