Renault Duster 2021 Launch: மாஸ் லுக்கில் ரெனால்ட் டஸ்டர் 2021 அறிமுகம்: அப்படி என்ன மாற்றம்?

Renault Duster 2021

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டஸ்டரின் புதிய மாடல் காரானது, இரண்டு பெட்ரோல் எஞ்சின், எல்பிஜி மற்றும் டீசல் எஞ்சின் சாய்ஸ்களில் கிடைக்கும்.

  • Share this:
லுக்கில் புதிய மாற்றத்துடன் ரெனால்ட் டஸ்டர் 2021 ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கார் மார்க்கெட்டில் ரெனால்ட் டஸ்டர் கார்கள் அதன் இணை நிறுவனமான டேஸ்ஸியாவின் (Dacia) அங்கமாக செயல்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டேஸியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டஸ்டர் எஸ்.யூ.வி 2021  மாடலுக்கான கார்களில் முன்புற லுக்கில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் டஸ்டர் கார்களில் இப்போது மேம்படுத்தப்பட்டிருக்கும் ஃபேஸ் லிஃப்ட் புதிய லுக் டிசைன், வாடிக்கையாளர்களை மேலும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேஸியா டஸ்டர் 2021 எஸ்.யூ.வி கார்  இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை டஸ்டர் நிறுவனம் வெளியிடவில்லை. ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளாக ரெனால்ட் நிறுவனம் எஸ்.யூ.வி கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதனால் விரைவில் இந்திய மார்க்கெட்டுக்கும் அந்த கார்கள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என கார் பிரியர்கள் கூறுகின்றனர். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டஸ்டரின் புதிய மாடல் கார், ஐரோப்பாவில் இரண்டு பெட்ரோல் எஞ்சின், எல்பிஜி மற்றும் டீசல் எஞ்சின் சாய்ஸ்களில் கிடைக்கும்.

Also Read:   மணமகன் செய்தித்தாளை படிக்காததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரை வழங்கும். 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 128 பிஎச்பி பவர் அல்லது 148 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ரஷ்லேன் வெளியிட்டுள்ள ரிப்போர்டின்படி, கேபினில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹீட்டடு முன்புற இருக்கைகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 3.5 இன்ச் மல்டி இன்ஃபர்மேஷன் திரை ஆகியவை உள்ளன.

Also Read:   ஜியோமீட்டில் வருடாந்திர பங்குதாரர் சந்திப்பை எவ்வாறு பார்ப்பது? என்ன அறிவிப்பு வெளியாகும்?

புதிய டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவியில் புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், Y வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், முன்புறத்தில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரெஞ்சு கார் நிறுவனமான டஸ்டர், பியூச்சர்களை அப்டேட் செய்வதில் கவனம் செலுத்தியுள்ள அதேநேரத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான சொகுசு வசதி மற்றும் பாதுகாப்பில் குறிப்பிடத் தகுத்த வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, உட்புறத்தில் 8 இன்ச் ட்ச் ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. மல்டிவியூ கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹீட்டடு முன்புற இருக்கைகள், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 3.5 இன்ச் மல்டி இன்ஃபர்மேஷன் ஸ்கிரீன் ஆகியவை உள்ளன. புதிய டஸ்டர் எஸ்.யூ.வியில் க்ரில் அமைப்பில் புதிய வடிவிலான க்ரோம் லென்ஸூகள் பதிக்கப்பட்டுள்ளன. 15 இன்ச் மற்றும் 16 இன்ச் அளவு சக்கரஙகளில் டஸ்டரை தேர்வு செய்து கொள்ளலாம்.
Published by:Arun
First published: