• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • இந்தியாவில் அறிமுகமாகியுள்ள 2021 Range Rover Velar கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள 2021 Range Rover Velar கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ரேஞ்ச்ரோவர் வெலர் காரில் 3டி சரவுண்ட் கேமரா, எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்சன், PM2.5 உடன் கூடிய கேபின் ஏர் ஐயோனிசேஷன், புதிய ஜெனரேஷன் பிவி புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொண்டுள்ளது.

  • Share this:
ஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய 2021 ரேஞ்ச் ரோவர் வெலர்-ஐ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை ரூ. 79.87 லட்சம் விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின் மற்றும் ஆர்-டைனமிக் எஸ் என்ற வேரியண்டில் கிடைக்கும். இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 184W பவர் மற்றும் 365Nm டார்க் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 150 KW மற்றும்430 Nm டார்க் ஆகியவற்றுடன் கிடைக்கிறது.

ரேஞ்ச்ரோவர் வெலர் ஆனது peerless blend of avant-garde design மற்றும் இதில் உள்ள வசதிகள், தொழில்நுட்பங்களால் இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புகள் மிகுந்த வாகனமாக இருக்கிறது. இந்த காரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம், இதில் இடம்பெற்றுள்ள பதிவுகள் ஆகியவை இந்த காரின் கவரக்கூடிய அம்சங்களாக உள்ளது.

இந்த காரில் 3டி சரவுண்ட் கேமரா, எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்சன், PM2.5 உடன் கூடிய கேபின் ஏர் ஐயோனிசேஷன், புதிய ஜெனரேஷன் பிவி புரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கொண்டுள்ளது. இந்த எஸ்யூவியில் டார்க் ஆன் டிமான்ட் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆல் வீல் டிரைவ்சிஸ்டம், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் 2 மற்றும் ஓட்டுனருக்கு உதவிகரமான பல தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Also Read : இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கு கீழ் விற்பனையாகும் பாதுகாப்பான கார்களின் பட்டியல்
 புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் ஆர் டைனமிக் எஸ் வேரியண்ட்டில் காப்பர் அலங்கார பாகங்களுடன் பம்பர், பானட் மற்றும் சைடு வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ணப் பூச்சுடன் கூரை இடம்பெற்றுள்ளது. இந்த காரில் எலெக்ட்ரானிக் ஏர் சஸ்பென்ஷன், பனோரமிக் சன்ரூஃப், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், மெரிடியன் ஸ்டீயரியோ சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

தி லேண்ட் ரோவர் ரேஞ்ச் இந்தியாவின் கார்களான ரேஞ்ச் ரோவர் எவாக்யூவின் ஆரம்ப விலை ரூ. 59.04 லட்சம், டிஸ்கவரி ஸ்போர்ட்டின் ஆரம்ப விலைரூ. 65.30 லட்சம், டிஃபெண்டர் 110-ன் ஆரம்ப விலை ரூ. 83.38 லட்சம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் ஆரம்ப விலை ரூ.91.27 லட்சம், ரேஞ்ச் ரோவரின் ஆரம்ப விலை ரூ.210.82 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. மேற்சொன்ன விலை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : மகாராஷ்டிராவில் இனி LLR மற்றும் புதிய வாகன பதிவு உள்ளிட்ட சேவைகளை ஆன்லைனிலேயே பெறலாம்.!

ஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியாவில் அஹமதாபாத், ஔரங்காபாத், பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர்,டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, கொச்சி, கர்னல், லக்னோ, லூதியனா, மங்களூர், மும்பை, நொய்டா, புனே, ராய்பூர், சூரத் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களில் அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: