செம கூல் டிசைன் மற்றும் பல அம்சங்களுடன் வரப்போகும் நியூ ஜெனரேஷன் "KTM RC 390" மாடல்!

செம கூல் டிசைன் மற்றும் பல அம்சங்களுடன் வரப்போகும் நியூ ஜெனரேஷன் "KTM RC 390" மாடல்!

கே.டி.எம் ஆர்.சி 390 (Photo: Motorrad Online)

2021 ஆர்.சி 390-ஐ இயக்கும் இயந்திரம் 373 சிசி சிங்கிள் சிலிண்டராக இருக்கும். இது தற்போதைய மாடலுக்கும் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சருக்கும் சக்தி அளிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
KTM RC 390 மாடல் கடந்த 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இருசக்கர வாகன பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் இதற்கு மாற்றாக கேடிஎம் நிறுவனம் ஆர்சி390 பைக் மாடலின் புதிய தலைமுறை "2021 KTM RC 390" தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்த புதிய தலைமுறை கேடிஎம் பைக்கின் மாதிரி புகைப்படம் ஒன்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெளியாகி பைக் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. மேலும் இது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள முழுமையாக வடிவமைக்கப்பட்ட மீடியம் டிஸ்பிளேஸ்மென்ட் கொண்ட KTM RC 390 பைக்கின் தோற்றம் சமீபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த புதிய தலைமுறை மாடல் ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து உளவு பார்க்கப்பட்ட காட்சிகளின் அடிப்படையில், இந்த ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் முற்றிலும் புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. இதில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கிளிப்-ஆன் ஹேண்டில்பார் வாகன ஓட்டிகளுக்கு உள்ள சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும். ஹேண்டில்பார் உடன் ஓட்டுனரின் இருக்கை சற்று உயரமாகவே வழங்கப்பட்டுள்ளது. 

2021 KTM RC 390 ஆனது முழு டிஜிட்டல் மற்றும் முழு வண்ண TFT டேஷ் அமைப்பை பெற வாய்ப்புள்ளது. பில்லியன் (Pillion) வசதியை மேம்படுத்த புதிய மோட்டார் சைக்கிளின் சப்ஃப்ரேமை KTM நிறுவனம் மறுவடிவமைக்க உள்ளது. ஒரு முழு எல்.ஈ.டி ஹெட்லேம்ப் புதிய தலைமுறை கே.டி.எம் ஆர்.சி 390-க்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது. ஹெட்லேம்பைச் சுற்றியுள்ள ட்ரான்ஸ்பரென்ட் ஃபேரிங் மேலும் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சவாரிக்கு சிறந்த காற்று பாதுகாப்பை எளிதாக்கலாம். மேலும் பூமராங் வடிவ எல்.ஈ.டி டர்ன் குறிகாட்டிகளுக்கான ஹௌசிங் புதிய ஃபங்கி வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேலும், ஃபேரிங்கின் பக்க பேனல்கள் உகந்த ஓட்டத்திற்கான காற்று துவாரங்களைக் கொண்டுள்ளன. 

Also read... பட்ஜெட் 2021 - வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி (VSP) என்றால் என்ன? முழு விவரம்!

வரம்பை மேம்படுத்த ஆஸ்திரிய ப்ராண்டான KTM ஒரு பெரிய ஃபியூயல் டேங்க்கை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய பின்புற சப்-ஃபிரேம், உயரமான ரைடர்ஸுக்கு சௌகரிய நிலையை கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மேம்பட்ட பிரேக்கிங் செயல்திறனுக்காக ஒரு பெரிய ஃபிரண்ட் டிஸ்க் பிரேக் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆர்.சி 390, ஏற்கனவே உள்ள KTM டியூக் பதிப்பைப் போன்ற டெயில் ஒளி அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை உளவு  பார்க்கப்பட்ட காட்சிகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆர்.சி 390-ஐ இயக்கும் இயந்திரம் 373 சிசி சிங்கிள் சிலிண்டராக இருக்கும். இது தற்போதைய மாடலுக்கும் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சருக்கும் சக்தி அளிக்கிறது. மேலும் இதன் திரவ-குளிரூட்டப்பட்ட அலகு அதன் 44 ஹெச்பி மற்றும் 35 என்எம் டார்க் கொண்ட செயல்திறன் ஆர்வலர்களிடையே அதிக புகழைப் பெற்றுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் மூலம் மோட்டார் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மாடல்களில் இருப்பது போல் மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் WP இன்வெர்டெட் டெலெஸ்கோப் பிராண்ட் ஆகியவை புதிய மாடலிலும் தக்கவைக்கப்பட்டுள்ளன. உமிழ்வை மேலும் குறைக்கும் வகையில் KTM புதிய பதிப்பின் வெளியேற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. KTM புதுப்பிக்கப்பட்ட RC 390 மாடல் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: