Home /News /automobile /

2021 கியா சோனெட் Vs நிசான் மேக்னைட் - எது பெஸ்ட்? டிசைன், எஞ்சின் அம்சங்கள் ஒப்பீடு!

2021 கியா சோனெட் Vs நிசான் மேக்னைட் - எது பெஸ்ட்? டிசைன், எஞ்சின் அம்சங்கள் ஒப்பீடு!

KIA Sonet 2021 Vs Nissan Magnite

KIA Sonet 2021 Vs Nissan Magnite

வேறு சில மாற்றங்களும் சோனட் மாடல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இவற்றை தவிர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேறு சில மாற்றங்களும் சோனட் மாடல் காரை முன்பை விட சிறந்ததாக மாற்றியுள்ளன.

இந்தியாவில் சமீபத்தில் கியா இந்தியா தனது செல்டோஸ் (Seltos) மற்றும் சோனெட்டின் (Sonet) மாடல் கார்களின் புதுப்பிக்கப்பட்ட எடிஷன்களை அறிமுகப்படுத்தியது. புதுப்பிக்கப்பட்ட சோனெட் மாடல் கார்களில், மிகவும் பிரபலமான HTX ட்ரிம் இப்போது HTX 7DCT (1.0T-GDI பெட்ரோல்) மற்றும் HTX 6AT (1.5 டீசல்) உள்ளிட்ட ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இவற்றை தவிர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேறு சில மாற்றங்களும் சோனட் மாடல் காரை முன்பை விட சிறந்ததாக மாற்றியுள்ளன. எனவே இந்த பிரிவில் ஒரு சிறிய மறுசீரமைப்புடன், நிசானின் மிகப்பெரிய மூவிங் மாடல் காரான நிசான் மேக்னைட்டிற்கு ஒரு சிறந்த போட்டியாக வந்துள்ளது 2021 கியா சோனெட்

1. டிசைன்:

* கியா சோனெட் டிசைன்: கியா சோனெட்டின் புதுப்பிக்கப்பட்ட எடிஷன் இப்போது புதிய கியா லோகோவை கொண்டுள்ளது. காரின் முன்பக்கத்தில், கார் முப்பரிமாண ‘ஸ்டெப்வெல்’ வடிவியல் கிரில் மெஷ் மூலம் பிராண்டின் சிக்னேச்சரான டைகர் நோஸ் க்ரில் நேர்த்தியான லுக்கை தருகிறது. பின்புறத்தில் கார் ஹார்ட் பீட் எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் டிஃப்பியூசர் ஃபின் ஸ்கிட் பிளேட்டுகளுடன் கூடிய டூயல் மஃப்ளர் டிசைனுடன் வருகிறது.

இந்த கார் தனது ஸ்போர்ட்டி மற்றும் பிரீமியம் லுக்கை உறுதி செய்யும் விதமாக க்ரிஸ்டல் கட் அலாய் வீல்களுடன் கிடைக்கும். எலக்ட்ரிக் சன்ரூஃப் கொண்ட இந்த மாடல் 8 மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். மோனோடோன் வண்ண விருப்பங்களில் -இன்டென்ஸ் ரெட், பீஜ் கோல்ட், அரோரா பிளாக் பேர்ல், கிராவிட்டி கிரே , ஸ்டீல் சில்வர், இன்டெலிஜென்ட் ப்ளூ , கிளேசியர் வொயிட் பேர்ல் மற்றும் க்ளியர் வொயிட் உள்ளிட்ட நிறங்கள் அடங்கும். டூயல் டோன் வண்ண விருப்பங்களை பொறுத்த வரை இன்டென்ஸ் ரெட் வித் அரோரா பிளாக் பேர்ல், பீஜ் கோல்ட் வித் அரோரா பிளாக் பேர்ல், கிளேசியர் வொயிட் பேர்ல் வித் அரோரா பிளாக் பேர்ல் உள்ளிட்ட கலவைகளில் கிடைக்கிறது.

* நிசான் மேக்னைட் டிசைன்: மெலிதான விளக்குகள் கூடிய பெரிய கிரில் போன்ற இதன் டிசைன் முதல் பார்வையிலேயே நம்மை கவர்ந்து விடும். காரின் சைட்களில் இதே எஃபெக்ட்டுடன் கூடிய பாடி கிளாடிங் மற்றும் அதிக அளவிலான சக்கர வளைவுகள் காருக்கு சிறப்பான தோற்றத்தை தருகிறது. ஒட்டுமொத்தமாக, இது ஸ்மார்ட் தோற்றமுடைய எஸ்யூவி. இது ஒரு பெரிய கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது என்பது மேக்னைட்டின் நிலைப்பாட்டையும் ‘பெரிய-எஸ்யூவி’ தோற்றத்தையும் சேர்க்கிறது. ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, காம்பாக்ட் எஸ்யூவி அதன் ஸ்ட்ராங் பாடி லைன்ஸ் டிசைன் மூலம் மஸ்குலர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. L-வடிவ எல்.ஈ.டி டி.ஆர்.எல், ஸ்வீப்-பேக் ஹெட்லைட்கள், பெரிய எண்கோண கிரில், அடர்த்தியான சி-பில்லர்கள், பின்புறத்திற்கு மேலே உள்ள ஹன்ச்கள் மற்றும் எஸ்யூவியை சுற்றியுள்ள பிளாக் பாடி கிளாடிங் ஆகியவை நிசான் மேக்னைட்டின் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களில் அடங்கும்.

2. இன்டீரியர்ஸ்:

* 2021 கியா சோனெட் இன்டீரியர்ஸ்: இந்த அப்டேட்டட் வெர்ஷன் இப்போது விரைவான கியர் மாற்றத்தை அனுமதிக்கும் பேடல் ஷிப்டர்களுடன் (Paddle shifters) வருகிறது. கியா சோனெட் புதிய அம்சங்களுக்கு எளிதாக அணுகக்கூடிய குறைந்தபட்ச சென்டர் கன்சோலைப் பெறும். யு.வி.ஓ இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்களுடன் 10.25-இன்ச் எச்டி டச் ஸ்கிரீன் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம், BOSE பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டமுடன் கூடிய எல்.ஈ.டி சவுண்ட் மூட் லைட்ஸ் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் உள்ளிட்ட பல முதல்-பிரிவு அம்சங்களை பெற்றுள்ளது.

* நிசான் மேக்னைட் இன்டீரியர்ஸ்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றுடன் வரும் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேக்னைட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. காரில் உள்ள வயர்லெஸ் அம்சங்களின் பட்டியலில் வயர்லெஸ் சார்ஜிங் பேடும் (wireless charging pad) உள்ளது. இருப்பினும், இது மேனுவலாக இயக்கப்படுகிறது. எனவே இது ஒரு ஹூண்டாயில் உள்ளது போல ஆட்டோமேட்டிக்கான ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்னால் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது, இது வண்ணமயமான சிறப்பான அனிமேஷன்களை கொண்டுள்ளது. யூஸருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இது காண்பிப்பதால் உதவியாக இருக்கும்.

3. அம்சங்கள் (Features):

* 2021 கியா சோனெட் அம்சங்கள்: சோனெட் மாடலின் இந்த அப்டேட்டட் வெர்ஷன் ஏராளமான மேம்பாடுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பின்புற கதவு சன்ஷேட் கர்டெய்ன்ஸ், சன்ரூஃப் திறக்க மற்றும் மூடுவதற்கான வாய்ஸ் கமாண்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், வெஹிகிள் ஸ்டேபிளிட்டி மேனேஜ்மென்ட், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், போன்ற அம்சங்களை லோயர் வேரியண்ட்டுகளுக்கு கொண்டு வந்துள்ளது கியா இந்தியா.

* நிசான் மேக்னைட் அம்சங்கள்: டாப்-ரங் வேரியண்ட்டில், மேக்னைட் ஒரு நீண்ட உபகரணங்கள் பட்டியலைப் பெறுகிறது. LED DRLs,-களுடன் LED பை - ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் அன்ட் ஃபோல்டிங் மிரர், ரியர் ஃபக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டருக்கான 7.0-இன்ச்TFT டிஸ்ப்ளே, வாய்ஸ் ரெகக்நேஷன் டெக்னாலஜி, புஷ் பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி அரௌண்ட் வீயூ கேமரா, டயர் பிரஷர்-மானிட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

4. எஞ்சின்:

* 2021 கியா சோனெட் எஞ்சின்: இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் 120 பிஎஸ் மற்றும் 171 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் 115 பிஎஸ் 144 என்எம், 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் யூனிட் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை உற்பத்தி செய்து வெளியேற்றும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஏடி, 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் ஐஎம்டி ஆகியவற்றின் விருப்பத்துடன் வரும்.

* நிசான் மேக்னைட் எஞ்சின்: இந்த கார் இரண்டு பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் வருகிறது. இதில் 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர், இயற்கையாகவே 72 ஹெச்பி உற்பத்தி செய்யும் எஞ்சின். மற்றொன்று 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ-பெட்ரோல் யூனிட் (HRA0) 100 ஹெச்பி மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும். நிசான் தனது மேக்னைட் ரக காரில் டீசல் எஞ்சின் ஆப்ஷனை வழங்க போவதில்லை. டிரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை, இரண்டு என்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் தரமாக இணைக்கப்பட்டுள்ளன. டர்போ-பெட்ரோல் கூடுதலாக CVT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் விருப்பத்தை பெறுகிறது.
Published by:Arun
First published:

Tags: Kia motors

அடுத்த செய்தி