2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் FTR 1200 பைக் மாடல் அப்டேட் வெர்சன்!

2021ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகம் FTR 1200 பைக் மாடல் அப்டேட் வெர்சன்!

இந்தியன் எப்.டி.ஆர்

FTR 1200 R கார்பன் பைக், டாப்-ஸ்பெக் பைக் ஆக இருப்பதால் சரிசெய்யக்கூடிய USD fork மற்றும் மோனோ ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. FTR 1200 எஸ் மாடல் பைக்குகளுக்கு தனித்தனியாக ஸ்பிரிங்குகளை வாங்கிக்கொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
FTR 1200 பைக் மாடலின் நான்கு அப்டேட் வெர்சன்கள் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்தியன் மோட்டர் சைக்கிள் நிறுவனம் FTR 1200 மாடலில் குறிப்பிடத்தகுந்த அப்டேட்களை செய்துள்ளது. அதன்படி, எப்.டி.ஆர் 1200, (FTR 1200), FTR 1200S, FTR 1200 ரேலி (Rally) மற்றும் எப்.டி.ஆர் 1200 R கார்பன் (Carbon) ஆகிய 4 மாடல்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. FTR 1200, எஸ் மற்றும் ஆர் வேரியண்டுகளில் சக்கரத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 19 இன்ச் இருந்த முன் சக்கரமும், 18 இன்ச் இருந்த ரீர் வீல் செட்டப்பும் முறையே 17 இன்ச்களாக மாற்றப்பட்டுள்ளன.

பழைய டயர் அளவினால், வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் இருந்த போதுமான வகைகளை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது சக்கரங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் நிறைய நிறுவனங்களின் டயர்களை தேர்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்துள்ளது. அப்டேட் வெர்சனுக்கு முன்னர் OEM Dunlop ரப்பர் உள்ளிட்ட டையர்களை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலை FTR 1200 மாடல் வைத்திருப்பவர்களுக்கு இருந்தது. சக்கரங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், அவை டோனிமோ எபெக்டை கொடுக்கின்றன. FTR 1200 ரேலியைத் தவிர மற்ற பைக்குகள் அனைத்தும் மெட்ஸெலர் ஸ்போர்டெக் ஸ்ட்ரீட் டயர்களுடன் (Metzeler Sportec Street tyres) வருகின்றன. எஃப்.டி.ஆரின் ரேக் மற்றும் டிரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், இது பைக்கை திசைகளை மிகவும் எளிதாக மாற்ற உதவுகிறது. பைக் இருக்கை உயரம் 36 மி.மீ குறைக்கப்பட்டுள்ளது.

Also read... உங்களுக்கு ஏற்ற விலையில் 5 சூப்பரான 110cc பைக்குகள் - என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

FTR 1200 R கார்பன் பைக், டாப்-ஸ்பெக் பைக் ஆக இருப்பதால் சரிசெய்யக்கூடிய USD fork மற்றும் மோனோ ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. FTR 1200 எஸ் மாடல் பைக்குகளுக்கு தனித்தனியாக ஸ்பிரிங்குகளை வாங்கிக்கொள்ளலாம். பைக்கை நிறுத்துவதற்கு முன்புறத்தில் இரட்டை ப்ரெம்போ பிரேக்குகளும் (dual Brembo brakes) மற்றும் பின்புறத்தில்  ஒரு டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

பைக்குகள் 1203 சிசி வி-ட்வின் திரவ குளிரூட்டலுடன் 123 bhp மற்றும் 120 Nm டார்க்கை 6000 rpm -ல் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. FTR S மற்றும் FTR R கார்பன் மாடல்கள் 3 வகையான ரைடிங் மாடல்களில் கிடைக்கின்றன. அவற்றுடன், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (stability control, வீலிங் கன்ட்ரோல் (wheelie control), டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முந்தைய FTR மாடலில் ABS மற்றும் cruise கன்ட்ரோல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: