அறிமுகத்துக்கு முன்பே தொடங்கிய முன்பதிவு: ஹோண்டா அமேஸ் காரின் அம்சங்கள் என்ன?

ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்

ஹோண்டாவின் புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே முன்பதிவு தொடங்கியுள்ளது.

  • Share this:
ஹோண்டா நிறுவனம் தன்னுடைய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் ஜப்பானிய வாகன உற்பத்தியாளரின் தயாரிப்புகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மாடல் ஆகும். தற்போது, புதுப்பிக்கப்பட்டு புதிய மாடலாக இந்தியாவில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று அறிமுகமாக உள்ளது.

அதிகாரபூர்வ அறிமுகத்தேதி வெளியிடப்பட்ட நிலையில், புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்துக்கு முன்பே, சில டீலர்கள் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவை தொடங்கியுள்ளனர். ஹோண்டா அமேஸின் இந்த புதிய பதிப்பு, டிசைனில் புதிய மாறுதல்கள் மற்றும் புதிய அம்சங்களின் அப்கிரேடோடு வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2018 ஆம் ஆண்டு அறிமுகமான தற்போதைய ஹோண்ட அமேஸ் வெர்ஷன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிசைன்

இது அமேஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட், அதாவது மேம்படுத்தப்பட்ட் பதிப்பு தானே தவிர, புதிய மாடல் அல்ல. எனவே, காரின் ஒட்டுமொத்த டிசைனை முழுவதுமாக மாற்றாமல், ஏற்கனவே இருக்கும் டிசைனில் சின்ன சின்ன சில மாற்றங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு பல புதிய அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல், முழு-LED முகப்பு விளக்குகள், நியூ அலாய் டிசைன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பம்ப்பர்களுடன் வருகிறது. ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் அமேஸ் காரின் நிறங்களைத் தவிர்த்து, புதிய பதிப்பில் கூடுதலாக புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். காரின் உட்புறத்தில் சேர்க்கப்பட்ட புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். காரின் இருக்கைகளுக்கு புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய இன்டீரியர் டிரிம் பீஸ், மற்றும் புதிய அம்சங்களுடன் வருகிறது.

இன்ஜின்

அமேஸ் இன் தற்போதைய இன்ஜின் அமைப்பில் ஹோண்டா நிறுவனம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிட்-சைஸ் செடான் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என்று இரண்டு எரிபொருள் இன்ஜின் பயன்பாட்டு விருப்பங்களில் வருகின்றது.

Also read... மாஸாக மாற்றப்பட்ட ’ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650’... என்ன மாற்றம் தெரியுமா?

இதில் 90hp உடன் 110 Nm டார்க் மற்றும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் விருப்பமும், 110 bp உடன், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் 200 Nm டார்க் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்புமும் உள்ளது.

இந்தியாவில் ஹோண்டாவின் புதிய அமேஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம், ஏற்கனவே சந்தையில் இருக்கும் மாருதி சுஸுகி டிசையர், தட்ட டைகோர், ஹுண்டாய் ஆரா மற்றும் ஃபோர்ட் ஆஸ்பையர் ஆகிய கார்களுக்கு போட்டியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: