• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Harley Davidson-ன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம்... விலை எவ்வளவு?

Harley Davidson-ன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம்... விலை எவ்வளவு?

ஹார்லி-டேவிட்சன்

ஹார்லி-டேவிட்சன்

Harley-Davidson தனது இந்திய வணிகத்தை புதுப்பித்த பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது மாடலாக இந்த புதிய Harley-Davidson Sportster S ஆனது இருக்கும்.

  • Share this:
ஹார்லி-டேவிட்சன் இந்தியா (Harley-Davidson India) நிறுவனம் Pan America 1250-க்குப் பிறகு, நியூ ரெவல்யூஷன் மேக்ஸ் 1250 ப்ளாட்ஃபார்மை (new Revolution Max 1250 platform) அடிப்படையாக கொண்ட தனது இரண்டாவது புதிய மாடல் பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஹார்லி-டேவிட்சன் தனது புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் (Sportster S) பைக்கை அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

புதிய ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக்கானது டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ள லோனாவ்லாவின் Aamby Valley-ல் நடக்கவிருக்கும் இந்தியா பைக் வீக் 2021 (India Bike Week 2021) நிகழ்வில் அறிமுகமாக இருக்கிறது.

Hero MotoCorp உடன் இணைந்து அமெரிக்க மோட்டார் சைக்கிள் பிராண்டான Harley-Davidson தனது இந்திய வணிகத்தை புதுப்பித்த பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது மாடலாக இந்த புதிய Harley-Davidson Sportster S ஆனது இருக்கும். டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் இந்தியா பைக் வீக் நிகழ்வில் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அறிமுகம் குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட இருக்கும் நிலையில், ஸ்போர்ட்ஸ்டர் எஸ் ஆளுமைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் பர்சனலைஸிங் எஞ்சினை பெறுகிறது.

மேலும் Harley-Davidson Sportster S வலிமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட சேஸ்ஸை பெறுகிறது. இது சக்தி-எடை விகிதத்தின் செயல்திறனைப் பராமரிக்கும் போது அதிக பலனை வழங்குகிறது. இந்த பைக்கில் பெரிய ஸ்கிட் பிளேட் (skid plate) மற்றும் கிளாசிக் பிளாட் லைன் (classic flat line) உள்ளது. முன்பக்க டயர் மற்றும் குட்டையான ஃபெண்டர் ஆகியவை பைக்கிற்கு classic bobber லுக்கை கொடுக்கிறது. இந்த பைக் 1,252 சிசி வி-ட்வின் லிக்விட்-கூல்டு எஞ்சினில் (1,252 cc v-twin liquid-cooled engine) இயங்குகிறது. இது 6,000ஆர்பிஎம் என்ற பீக் டார்க்கில் 121bhp- ஆற்றலை வெளிப்படுத்தும்.

லுக் என்று வரும் போது, ஹார்லி-டேவிட்சனின் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் ஏமாற்றம் தரவில்லை. முன்பக்கத்தில், இந்த பைக் ஒரு காப்ஸ்யூல் வடிவ ஹெட்லைட்டை கொண்டுள்ளது. பின்புறம் ஒரு தட்டையான டெயில் செக்ஷனை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் சஸ்பென்ஷனில் 43 மிமீ இன்வெர்ட்டட் ஃபோர்க்ஸ் (inverted forks)மற்றும் ரிமோட் ப்ரீலோட் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட பிக்கிபேக் ரிசர்வாயர் ரியர் ஷாக் (piggyback reservoir rear shock) ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் இதன் எஞ்சின் bulky twin-can exhausts- ஐ கொண்டுள்ளது. இதன் 17-இன்ச் முன் மற்றும் 16-இன்ச் பின்புற டயர்கள் பைக்கை மிக அழகாக, நேர்த்தியாக காட்டுகிறது.

Also read... நான்கு புதிய 350 சிசி பைக்குகள் அறிமுகம் – ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவிப்பு

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் டெக்னலாஜி பற்றி பேசுகையில், இந்த பைக் ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய 4.0-இன்ச் விட்டம் கொண்ட TFT டிஜிட்டல் கன்சோல், 6-ஆக்சிஸ் இன்ர்ஷியால் மெஷர்மென்ட் யூனிட் (IMU), கார்னர்ரிங் ABS, ட்ராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட நவீன மின்னணு வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் அறிமுக விலை ரூ.15 முதல் 20 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: