'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்

இந்தியாவின் 74வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 2020ல் மகேந்திராவின் புதிய தயாரிப்பான மகேந்திரா தார் பற்றிய அறிவிப்பு உலகளவில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி இந்தியாவில் அது அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்
'2020 மஹிந்திரா தார்' - இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி அறிமுகம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 10:27 PM IST
  • Share this:
இந்தியாவில் வாகன தயாரிப்பின் முன்னோடியான மகேந்திரா தனது வாகன மாடல், அதன் சிறப்பம்சங்கள் மூலம் மக்களைக் கவர்வது வழக்கம். இப்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 74வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 2020ல் மகேந்திராவின் புதிய தயாரிப்பான மகேந்திரா தார் பற்றிய அறிவிப்பு உலகளவில் வெளியிடப்பட்டது.

மேலும், இந்த புதிய தயாரிப்பு எந்த ஒரு நிலப்பரப்பிலும் பயனர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று உறுதியளித்தது. இந்நிலையில், தற்போது மஹிந்திரா தார் வாகனம் அக்டோபர் 2ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. செப்டம்பர் 26ம் தேதி மஹிந்திரா தாரின் முதல் யூனிட் ஏலத்தில் விடப்பட்டது. ரஷ் லேனில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, வரவிருக்கும் வாகனத்திற்கான அதிகபட்ச ஆன்லைன் ஏலத்தொகை ரூ.79.25 லட்சம் ஆகும்.

இந்த ஏலம் செப்டம்பர் 29லிருந்து தொடங்கும், இதற்கான உண்மையான அறிக்கை பெறப்பட்டால் விலை ரூ.1 கோடியைத் தாண்டக்கூடும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த புதிய மஹிந்திரா தார், இதன் தொடரின் இரண்டாவது தலைமுறை வாகனம் ஆகும். மஹிந்திரா நிறுவனம் தனது முந்தைய வாகனத்துடன் ஒப்பிடுகையில் சில வெளிப்புற புதுப்பிப்புகளைச் செய்துள்ளது. இந்த வாகனம் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது.


Also read: குறைந்த சந்தா விலையில் நெக்ஸன் எலக்ட்ரிக் காரை வழங்கும் டாடா மோட்டார்ஸ்இதனால் அதிகமானோர் இந்த வாகனத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த மாடல் வழங்குகிறது. 2020 மஹிந்திரா தாரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின், 130 hp பவர் மற்றும் 320 Nm டார்க் அளிக்கிறது. மேலும் 2.0 லிட்டர் ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின், 150 hp பவர் மற்றும் 320 Nm டார்க்கை வழங்குகிறது.

வசதியான இருக்கைகளுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பயனருக்குத் தேவையானதை அவர்கள் தேர்வு செய்துகொள்ள இந்த வாகனம் வாய்ப்பளிக்கிறது. 2020 மஹிந்திரா தாரின் பெட்ரோல், டீசல் வகைகள் பவர் மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டிலும் தங்களை நிரூபிக்க உள்ளன.இருப்பினும், இந்த வாகனத்தின் விலையை இதுவரை வெளியிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரின் உட்புறம் முன்பை விட நன்றாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா தார் டிஜிட்டல் ஓடோமீட்டர், டிஜிட்டல் கடிகாரம், எலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வினைல் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் மோனோக்ரோம் எம்ஐடி டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளதால் கார் வாங்க நினைப்பவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்வது முக்கியம்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading