வாகனப் பாதுகாப்பு சோதனையில் 5/5: அதிரடி காட்டிய இந்தியாவின் புதிய ஹோண்டா கார்..!
முன்னணியில் உள்ள ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசூகி சியஸ் ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாக ஹோண்டா சிட்டி 2020 இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பட உதவி- ( ASEAN NCAP)
- News18 Tamil
- Last Updated: March 31, 2020, 1:24 PM IST
சர்வதேச கார்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 5 என முழு மதிப்பெண் பெற்றுள்ளது ஹோண்டாவின் புதிய அறிமுகம்.
ஹோண்டா சிட்டி 2020 மாடல்தான் இந்தியாவின் மிகுந்த பாதுகாப்பான கார் என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மார்ச் 16-ம் தேதி இந்தியாவில் ஹோண்டா சிட்டி 2020 மாடல் வெளியாவதாக இருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க மிகச்சிறந்த கார்களின் பட்டியலில் தற்போது ஹோண்டா சிட்டி 2020 இடம் பெற்றுள்ளது. ASEAN NCAP நடத்திய பாதுகாப்பு சோதனையில் முழு மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளது ஹோண்டா சிட்டி 2020. இதனால், தற்போது இந்த காரின் மதிப்பு அதிகமாகியுள்ளது. SV ரகம், 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட மாடல்தான் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த மாடல் BS 6 ரகமாக 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது முன்னணியில் உள்ள ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசூகி சியஸ் ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாக ஹோண்டா சிட்டி 2020 இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் பார்க்க: ராயல் என்ஃபீல்டு-ன் அடுத்த அறிமுகம் ‘Meteor 350’..!
ஹோண்டா சிட்டி 2020 மாடல்தான் இந்தியாவின் மிகுந்த பாதுகாப்பான கார் என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மார்ச் 16-ம் தேதி இந்தியாவில் ஹோண்டா சிட்டி 2020 மாடல் வெளியாவதாக இருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க மிகச்சிறந்த கார்களின் பட்டியலில் தற்போது ஹோண்டா சிட்டி 2020 இடம் பெற்றுள்ளது.