இந்தியாவில் அறிமுகமாக உள்ள BMW G 310 GS பைக் - சிறப்பம்சங்கள் தெரியுமா...?

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 8ம் தேதி BMW G 310 GS பைக் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக உள்ள BMW G 310 GS பைக் - சிறப்பம்சங்கள் தெரியுமா...?
அக்டோபர் 8ல் இந்தியாவில் BMW G 310 GS பைக் அறிமுகம். (Photo: BMW Motorrad India)
  • Share this:
பைக்குகள் என்றால் பலருக்கும் அலாதி பிரியம். அதிலும் BMWன் தயாரிப்புகள் என்றால் சொல்லவே வேண்டாம். பலரும் அதில் வரவிருக்கும் புதிய மாடல்கள், அதிலுள்ள பிரத்யேக அம்சங்கள் அனைத்தையும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எதிர்வரும் அக்டோபர் 8ம் தேதி G 310 GS சாகச பைக்கை BMW மோட்டராட் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. இந்தப் புதிய G 310 GS, BS-Vi எமிஷன் நார்ம் கொண்டிருக்கும். மேலும் தற்போதுள்ள மாதிரியுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்களுடன் இந்த புதிய பைக் வெளிவர இருக்கிறது.

இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் 1 அன்று இதற்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியது. இந்நிலையில், இந்த பைக் புதிய GS சில மாற்றங்களுடன் வரும் என்பது இப்போதே தெளிவாக தெரிகிறது. BS-Vi மாடலில் இருந்த கறுப்புக்கு மாற்றாக இப்போது அதன் பிரேம் சிவப்பு நிறத்தில் உள்ளது. அது தவிர, அந்த வாகனத்தின் அடிப்படை நிறம் முன்பு போல வெள்ளை அல்லது வெள்ளி நிறத்திற்கு பதிலாக கறுப்பு நிறத்தில் உள்ளது. எரிபொருள் தொட்டியில் உள்ள ‘GS’ லோகோ அளவு முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது.

Also read: அட்டகாசமான அம்சங்களுடன் லேண்ட் ரோவர் டிஃபென்டர் - அக்டோபர் 15 முதல் விற்பனை


மேலும், இது ஒரு ரேஸ் பைக் போன்ற ஸ்டிக்கரையும் கொண்டுள்ளது. மற்றொரு மாற்றம் என்னவென்றால் புதிய ஹெட்லேம்ப் யூனிட். இது இப்போது எல்.ஈ.டி - பகல்நேரத்திலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செய்திகள் அனைத்தும் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்திலிருந்து உங்களுக்காக அளித்திருக்கிறோம். மேலும் சில தகவல்களுக்கு பைக்கை வெளியிடும் நாள் வரை காத்திருங்கள்.

மோட்டார் சைக்கிள் அதே 312.2 சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சினுடன் எரிபொருள் - இன்ஜெக்க்ஷன் மற்றும் லீகுய்ட் - குளிரூட்டலுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஐ போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. BS- VI மாடல் அப்பாச்சிக்கு ஒத்த அம்சங்களை இந்த மோட்டார் சைக்கிள் பெற்றிருக்குமா, இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும். ரைடு-பை-ஒயர், சவாரி முறை மற்றும் டிஎஃப்டி கருவி கன்சோல் போன்ற அம்சங்களைப் பற்றியும் நாம் காண காத்திருக்க வேண்டும்.
First published: October 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading