பிப்ரவரி 2020-ல் இந்தியாவின் மாபெரும் ‘ஆட்டோ எக்ஸ்போ’... காத்திருக்கும் புதிய அறிமுகங்கள்...!

நியூ ஜென் ஹூண்டாய் க்ரெட்டா கூட வருகிற 2020 எக்ஸ்போவில் அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 2020-ல் இந்தியாவின் மாபெரும் ‘ஆட்டோ எக்ஸ்போ’... காத்திருக்கும் புதிய அறிமுகங்கள்...!
ஆட்டோ எக்ஸ்போ 2020
  • News18
  • Last Updated: August 1, 2019, 10:07 AM IST
  • Share this:
இந்தியாவின் மாபெரும் ஆட்டோ எக்ஸ்போ வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது.

பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் இந்த தேசிய ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. வருகிற ஆட்டோ எக்ஸ்போ நொய்டாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்போவில் பல புதிய ரக கார் மாடல்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகியவற்றின் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹூண்டாய், கியா, வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரும் கண்காட்சியை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா H2X, வோக்ஸ்வேகன் எஸ்யூவி, ஸ்கோடா எஸ்யூவி ஆகியவையும் இந்தியாவுக்கான மாடல்களைக் களம் இறக்க உள்ளது.


நியூ ஜென் ஹூண்டாய் க்ரெட்டா கூட வருகிற 2020 எக்ஸ்போவில் அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விலை ₹1.5 லட்சம் வரை குறைய வாய்ப்பு..!
First published: August 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்