Home /News /automobile /

1.08 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது சுசூகி இன்ட்ரூடர்!

1.08 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது சுசூகி இன்ட்ரூடர்!

சுசூகி இன்ட்ரூடர். (படம்- Suzuki Motorcycle India)

சுசூகி இன்ட்ரூடர். (படம்- Suzuki Motorcycle India)

சொகுசான பயண அனுபவம், பில்லியனில் சாய்மானம் மற்றும் அதிகத் திறன் கொண்ட பைக்காக இருக்கும்

  • News18
  • Last Updated :
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிதாக 1,08,162 ரூபாய்க்கு 2019-ம் ஆண்டுக்கான புதிய பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

அப்டேட் செய்யப்பட்ட ஷிஃப்ட் கியர், ப்ரேக் பெடல் என அசத்தும் இன்ட்ரூடர் 155cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சொகுசான பயண அனுபவம், பில்லியனில் சாய்மானம் மற்றும் அதிகத் திறன் கொண்ட பைக்காக இருக்கும் என இன்ட்ருடருக்கு அறிமுகம் கொடுத்துள்ளது சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

இதுகுறித்து சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தேவஷிஸ் ஹண்டா கூறுகையில், “இன்றைய நவீன கால வடிவமைப்பு மற்றும் உயரிய தோற்றம் கொண்ட சுசூகி இன்ட்ரூடர் 2019, க்ரூஸர் ரக பைக் விரும்பிகளுக்கு ஏற்றதாக இருக்கும்” என்றார்.

சில காலங்களுக்கு முன்னர்தான் க்ரூஸர் ரக ‘ஸ்பெஷல் எடிஸன்’ இன்ட்ரூடர் SP மற்றும் இன்ட்ரூடர் FI SP பதிப்புகள் வெளியிடப்பட்டன. மேட் ப்ளாக் மற்றும் கேண்டி ரெட் ஆகிய இரண்டு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: குமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த நெருக்கடி: டிடிவி சிறப்புப் பேட்டி





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Rahini M
First published:

Tags: Suzuki Intruder

அடுத்த செய்தி