புதிய டீசல் காரை அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

மாருதி சுசூகி எர்டிகா

9.86 லட்சம் ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள புதிய எர்டிகா இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக காராக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாருதி சுசூகி நிறுவனம் டீசல் கார்களை நிறுத்தப்போவதாக அறிவித்த சில நாள்களிலேயே தற்போது புதிய டீசல் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது மாருதி சுசூகியில் புதிய எர்டிகா அறிமுகமாகியுள்ளது. 1.5 லிட்டர் உடன் DDiS 225 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு களம் இறங்கியுள்ளது எர்டிகா. 9.86 லட்சம் ரூபாயில் தொடங்கி டாப் ரகம் 11.20 லட்சம் ரூபாய் வரையில் விற்பனைக்கு உள்ளது. ஃபியட்-ன் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் என்ஜினுக்கு மாற்றாகவே DDiS 225 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எர்டிகா, 1498cc, நான்கு சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போ என்ஜின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 1500- 2500 rpm என்ற கணக்கில் டார்க் வெளியீடு 225 Nm ஆக உள்ளது. ஆறு ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

9.86 லட்சம் ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள புதிய எர்டிகா இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக காராக உள்ளது. மாருதி சுசூகி 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் டீசல் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக நிறுத்தப்போவதாக சில காலங்களுக்கு முன்னர் தான் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: சாலையில் குறுக்கே நின்ற காரை முட்டித் தள்ளிய காட்டு யானை!
Published by:Rahini M
First published: