• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விற்பனைக்கு வரும் ஹூண்டாய் எலான்ட்ரா... தொடங்கியது முன்பதிவு!

விற்பனைக்கு வரும் ஹூண்டாய் எலான்ட்ரா... தொடங்கியது முன்பதிவு!

ஹூண்டாய் எலான்ட்ரா

ஹூண்டாய் எலான்ட்ரா

இந்தியாவில் இன்னும் ஒரு வார காலத்தில் அறிமுகமாகும் எலான்ட்ரா முதன்முதலாக 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹூண்டாய் எலான்ட்ரா காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி முதல் எலான்ட்ரா விற்பனைக்கு வருகிறது.

ஸ்போர்ட்டி லுக் உடன் மிகவும் அட்டகாசமான அம்சங்களுடன் அக்டோபர் 3-ம் தேதி முதல் ஹூண்டாய் எலான்ட்ரா விற்பனைக்கு வருகிறது. BS-VI ரகமாக மேம்படுத்த ஹூண்டாய் நிறுவனம் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட எலான்ட்ராவை வெளியிடுகிறது. சமீபத்தில் அறிமுகமான கியா செல்டாஸ் காரின் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக அமையும் எனக் கூறப்படுகிறது.

புதிய தொழில்நுட்ப அப்டேட்களான 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்‌ஷன், வயர் இல்லா சார்ஜிங் அமைப்பு, எச்சரிக்கை அலாரம், லேன் கன்ட்ரோல், ஆட்டோ ப்ரேக்கிங் ஆகிய அம்சங்கள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இன்று செப்டம்பர் 25-ம் தேதி முதல் எலான்ட்ரா காருக்கான முன்பதிவு தொடங்குகிறது.

இந்தியாவில் இன்னும் ஒரு வார காலத்தில் அறிமுகமாகும் எலான்ட்ரா முதன்முதலாக 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் காரின் மூன்றாம் தலைமுறை பதிப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. புதிய அப்டேட் உடனான எலான்ட்ரா , ஹோண்டா சிவிக், டொயோட்டா கொரோல்லா அல்டிஸ் மற்றும் ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: கார்ப்ரேட் வரிக் குறைப்பு - ஆட்டோமொபைல் துறைக்குப் பெரும் பயனில்லை!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 50 சர்ச்சைகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: