ஏபிஎஸ் வசதியுடன் சுசூகி ஜிக்ஸர் பைக் இந்தியாவில் அறிமுகம்

ஏபிஎஸ் வசதியுடன் சுசூகி ஜிக்ஸர் பைக் இந்தியாவில் அறிமுகம்
சுசூகி ஜிக்ஸர் எஸ்பி
  • News18
  • Last Updated: July 10, 2018, 6:19 PM IST
  • Share this:
முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான சுசூகி 2 புதிய  ஜிக்ஸர் மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சுசூகி நிறுவனம் ஜிக்ஸர் சீரிஸ் வகை பைக்குகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது. அந்த வகையில் சுசூகி ஜிக்ஸர் எஸ்பி மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் எஸ்பி ஆகிய 2 புதிய மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

2018-ஆம் ஆண்டுக்கான சுசூகி எஸ்பி மாடல் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. மெட்டாலிக் மெஜஸ்டிக் கோல்டு மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் (Anti Lock Breaking System) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க் அருகே ‘எஸ்பி’ என்று கிராபிக்ஸ் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது.


ஜிக்ஸர் எஸ்பி பைக்குக்கும், ஜிக்ஸர் எஸ்எப் எஸ்பி மாடல் பைக்குக்கும் தோற்றத்தில் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு மாடல்களிலும் 155 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல் பைக் குறித்து நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் சஞ்சீவ் ராஜசேகரன் கூறுகையில், “2014-ம் ஆண்டு ஜிக்ஸர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்டைல், தரம் மற்றும் திறன் ஆகிய மூன்றிலும் ஜிக்ஸர் தனி முத்திரையை படைத்துள்ளது. இந்த புதிய மாடலுக்கும் வரவேற்பு தொடரும்’ என தெரிவித்தார்.
First published: July 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...