கவாஸகி நின்ஜா300 பைக்கின் புதிய மாடல் அறிமுகம்!

கவாஸகி நின்ஜா300 பைக்கின் புதிய மாடல் அறிமுகம்!
கவாசகி நின்ஜா 300 ஏபிஎஸ்
  • News18
  • Last Updated: July 20, 2018, 6:13 PM IST
  • Share this:
புதிய வசதிகளை கொண்ட அதிநவீன நின்ஜா 300 பைக்கை கவாஸகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

கவாஸகி நிறுவனத்தின் நின்ஜா ஸ்போர்ட்ஸ் பைக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல லட்சம் மதிப்புள்ள கவாஸகியின் நின்ஜா வகை பைக்குகளை ரேஸ் பிரியர்கள் பெரிதும் விரும்பி வாங்கி வருகிறார்கள். குறிப்பாக கவாஸகி நின்ஜா 300 பைக், குறைந்த விலை காரணமாகவும் செயல்திறன் காரணமாகவும் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் புதிய வசதிகளுடன் நின்ஜா 300 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நின்ஜா 300 மற்ற நின்ஜா பைக்குகளை போலவே 8 வால்வுகளை கொண்ட லிக்விட் கூல் பேரலல் டிவின் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதாக வடிவமைக்கபட்டுள்ள ஸ்டீல் ஃபிரேம், சேசிஸின் நிலைத் தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் இந்த புதிய நின்ஜா 300 முழுக்க ரேஸிங் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்த பைக்கின் முன் பகுதி நின்ஜா இசட் எக்ஸ்-10 ஆர் போல் வடிமைக்கப்பட்டுள்ளது. வீல் டிசைன் நின்ஜா இஸட் எக்ஸ்-14 ஆர் போல் வடிமைக்கப்பட்டுள்ளது.

புதிய நின்ஜா 300 ஏபிஎஸ் பைக் இரு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. லைம் கிரீன் மற்றும் கேண்டி பிளாஸ்மா புளூ என்ற பெயர்களில் முறையே பச்சை மற்றும் நீல வண்ணத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை முன் பதிவு செய்வோருக்கு 3 வருட அன்லிமிட்டட் வாரண்டியையும் கவாஸகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூபாய் 2.98 லட்சம்.
First published: July 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...