முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயில் கருகி நாசம்... காரணத்தை கண்டறிய களமிறங்கிய ஜிதேந்திரா நிறுவனம்

20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயில் கருகி நாசம்... காரணத்தை கண்டறிய களமிறங்கிய ஜிதேந்திரா நிறுவனம்

மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தைச் சந்திக்கும் நிகழ்வு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஜிதேந்திரா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியது

மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தைச் சந்திக்கும் நிகழ்வு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஜிதேந்திரா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியது

மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தைச் சந்திக்கும் நிகழ்வு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஜிதேந்திரா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஏப்ரல் 9ம் தேதி ஜிதேந்திரா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பைக் கிளப்பிய நிலையில், சுமார் 20 ஸ்கூட்டர்களை தீக்கிரையான காரணம் குறித்து நிறுவனம் விசாரனையை தொடங்கியுள்ளது.

மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தைச் சந்திக்கும் நிகழ்வு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு தரம் குறித்த விவாதம் மக்கள் மத்தியில் சூடுபிடித்துக் காணப்படுகின்றது. உதாரணமாக திருப்பூரில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்தது, மின்சார வாகனத்தின் பேட்டரி வெடித்ததால் தந்தை - மகள் மூச்சுத்திணறி உயிரிழந்தது போன்ற பல சம்பவங்கள் தமிழக மக்களை பீதியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி அன்று கண்டெய்னர் லாரி மூலமாக அனுப்பிவைக்கப்பட்ட ஜிதேந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் தீக்கிரையாகின. சுமார் 40 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மேல் மற்றும் கீழ் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், மேல் அடுக்கில் இருந்த வாகனங்களில் திடீரென தீ பரவியது. ஆனால் இரு அடுக்குகளுக்கும் இடையே இரும்பு தகரம் இருந்ததால், கீழே இருந்த ஸ்கூட்டர்கள் தப்பின. அதாவது மொத்தம் 40 ஸ்கூட்டர்கள் ஏற்றப்பட்ட நிலையில், 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீக்கிரையாக்கின.

ஏற்கனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வரும் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜிதேந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தது பேரதிச்சியை உருவாக்கியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜிதேந்திரா நிறுவனமும் ஸ்கூட்டர்கள் தீப்பற்றியதற்கான காரணம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.

ஜிதேந்திரா நியூ EV தொழில்நுட்பத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் மூல காரணத்தை ஆராய்ந்து வருகிறோம், வரும் நாட்களில் அதற்கான சரியான காரணத்தை கண்டறிவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். கண்டெய்னர் லாரியின் மேல் தளத்தில் இருந்து புகை வருவதை கண்ட எங்கள் குழு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிதேந்திரா புதிய EV டெக் 2016 முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் Ola Electric மற்றும் Okinawa உட்பட பல்வேறு உற்பத்தியாளர்களின் மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்த சம்பவம், மின்சார வாகனங்கள் மீதான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மக்கள் அதனை வாங்குவது பாதுகாப்பானதா? என்ற சந்தேகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்க காரணம் தொழில்நுட்ப கோளாறா? அல்லது பிற காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என தெளிவுப்படுத்தும் முயற்சியில் ஜிதேந்திரா நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

Read More : 70 வயது முதியவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த 60 ஆண்டு கால நண்பர்கள்...

இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

Read More : ஸ்கூட்டர் வாங்க போறீங்களா - இந்தியாவில் விற்பனையாகும் மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்!

 தீ விபத்தினால் ஏற்பட்ட இழப்பு குறித்த விபரம் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

First published:

Tags: Electric bike