`25 டன் மின்னணு கழிவுகளை திரட்டிய துபாய் மாணவி!’ - குவியும் பாராட்டுகள்

ரிவா துல்புலே

பத்தாம் வகுப்பு மாணவியான ரிவா துல்புலே (Riva Tulpule) சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீட்டிற்கு மாறும்போது அதிகமான பயன்படுத்தப்படாத மின்னனு பொருள்கள் இருப்பதைக் கவனித்துள்ளார்.

  • Share this:
    பத்தாம் வகுப்பு மாணவியான ரிவா துல்புலே (Riva Tulpule) சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீட்டிற்கு மாறும்போது அதிகமான பயன்படுத்தப்படாத மின்னனு பொருள்கள் இருப்பதைக் கவனித்துள்ளார். இந்த சம்பவம்தான் `WeCareDXB’ என்ற மின்னனு மறுசுழற்சி தொடர்பான பிரசாரத்தை அவர் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

    உலக அளவில் தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனால், ஒருபுறம் தொழில்நுட்பங்கள் நவீனமாகிக்கொண்டே செல்ல மறுபுறம் மின்னனு கழிவுகள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன. இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள சுமார் 25 டன் மின்னனு கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பான பிரசாரத்தை இந்தியாவைச் சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் தொடங்கியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பத்தாம் வகுப்பு மாணவியான ரிவா துல்புலே (Riva Tulpule) சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீட்டிற்கு மாறும்போது அதிகமான பயன்படுத்தப்படாத மின்னனு பொருள்கள் இருப்பதைக் கவனித்துள்ளார். இந்த சம்பவம்தான் `WeCareDXB’ என்ற மின்னனு மறுசுழற்சி தொடர்பான பிரசாரத்தை அவர் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ரிவா தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளில் சுமார் 25 டன் மின் கழிவுகளை அவர் சேகரித்ததாக தெரிவித்துள்ளார்.

    ரிவா பிரசாரம் தொடர்பாக பேசுகையில், ``எனது அம்மாவிடம் தேவையில்லாத மின்னனு பொருள்களை ஏன் வெளியேற்ற முடியாது என்று கேட்டேன். அதற்கு அவர், `இந்த பொருள்களை கையாள தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதில் கூறினார். ஆனால், அதனை சரியாக எப்படி செய்வது என எங்களுக்கு தெரியவில்லை. இது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சில ஆராய்ச்சிகளை செய்ய முடிவு செய்தேன். இதுதான் மறுசுழற்சி தொடர்பான பிரசாரத்தை மேற்கொள்ள வழிகாட்டியது. மின்னனு சாதனங்களை மறுசுழற்சி செய்வது குறித்து பலருக்கும் தெரியாததால் அதனை பொதுவெளியில் கொட்டுகிறார்கள்” என்றார்.

    `WeCareDXB’ என்ற தலைப்பின் கீழ் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களின் வழியாக பிரசாரத்தை மேற்கொண்டார். மானவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரையில் சுமார் 2000 உடைந்த லேப்டாப்கள், மொபைல் போன்கள், பிரிண்டர்கள், கீ போர்டுகள் உள்ளிட்ட பல பொருள்களை சேகரித்துள்ளார். சேகரித்த பொருள்களை மறுசுழற்சி செய்ய துபாயைச் சேர்ந்த மறுசுழற்சி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடர்பு கொண்டுள்ளார். இந்த மிகப்பெரிய முன்னெடுப்பை செய்த ரிவாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
    Published by:Ram Sankar
    First published: