சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருள் இறக்குமதி கட்டப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்திய அரசு மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதே போல் மாநிலங்களும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் வாங்குவோருக்கும் சலுகைகளை வழங்கி வருகின்றன. இதனால் இந்தியா முழுவதும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கனிசமாக அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது உத்தரப்பிரதேச அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேச மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கை 2022 இன் படி, அக்டோபர் 14 2022, முதல் அக்டோபர் 13, 2025 வரை உத்தரப்பிரதேசத்தில் விற்கப்படும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதோடு எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களும் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து மாவட்ட போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் அனைத்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம், பேட்டரி எலக்ட்ரிக் வாகனம், மற்றும் ஃப்யூயல் செல் மின்சார வாகனம் ஆகியவையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் மானியத்துடன் உத்திரப்பிரதேச அரசின் வரி விலக்கும் உள்ளதால், அம்மாநில மக்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். மத்திய அரசும், மாநில அரசும் வழங்கும் இந்த நிவாரணங்கள் மூலம் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும், கார்கள் ரூ.1 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Also Read : இரும்பு பாகுபலி.. பாதுகாப்பில் டாப் லெவல்.. குறைந்த விலையில் பக்கா கார் 'டாடா பஞ்ச்'.!
கனரக எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியிலும் உத்தரப்பிரதேச அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி மாநிலத்தில் முதலில் வாங்கப்படும் 400 பேருந்துகளுக்கு ஒரு எலெக்ட்ரிக் பேருந்துக்கு ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களும் மின்சார வாகனங்களை வாங்க அரசு ஊக்குவிக்கிறது. இதற்காக, அரசு ஊழியர்கள் முன்பணம் வழங்கவும் அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசின் இந்த முடிவால் அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric car, Uttar pradesh