• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு விலக்கு - ஒடிசா அறிவிப்பு!

சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு விலக்கு - ஒடிசா அறிவிப்பு!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு விலக்கு

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு விலக்கு

ஒடிசா மோட்டார் வாகன வரிச் சட்டத்தின் கீழ் (Odisha Motor Vehicles Taxation Act) வழங்கப்பட்ட இந்த விலக்கு, வரும் 2025-ஆம் ஆண்டு வரை பொருந்தும் என்றும் அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.

  • Share this:
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் சூழலில், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்கப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. இந்த வகையில் சாலை வரியை மட்டுமின்றி, அந்த மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் பதிவு கட்டணத்தையும் (registration fees) முற்றிலும் தள்ளுபடி செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

சமீபத்தில் அம்மாநில அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ஒடிசா மாநிலத்தில் மோட்டார் வாகன வரிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எரிபொருள் விலையேற்றம் ஒருபக்கம் சுற்றுசூழல் மாசு மறுபக்கம் என இருந்து வரும் நிலையில், மக்கள் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய முடிவை ஒடிசா மாநில அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் 100% விலக்கு அளிப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஒடிசா அரசின் இந்த முடிவை அடுத்து அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் சாலை வரி (road tax) அல்லது பதிவு கட்டணம் (registration fees) செலுத்த வேண்டியதில்லை.

ஒடிசா மோட்டார் வாகன வரிச் சட்டத்தின் கீழ் (Odisha Motor Vehicles Taxation Act) வழங்கப்பட்ட இந்த விலக்கு, வரும் 2025-ஆம் ஆண்டு வரை பொருந்தும் என்றும் அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. இந்த புதிய சலுகை ஒடிசா மாநிலத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்துடன் கூடுதல் சலுகையாக உள்ளது. மாநிலங்களுக்கு NITI ஆயோக் அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் EV கொள்கையை முதலில் அறிவித்த மாநிலம் ஒடிசா ஆகும்.

இதனிடையே ஒடிசா எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையின் கீழ் மின்சார வாகனங்களை வாங்குபவர்கள், உற்பத்தியாளர்கள், பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கு பல சலுகைகளை நீட்டிக்க மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும் அம்மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Also read... தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் மாருதி சுசுகி - அக்டோபரில் கடும் வீழ்ச்சி!

மின்சார வாகனக் கொள்கையின் கீழ், பாலிசி காலத்தில் (ஐந்து ஆண்டுகள் ) பின்வரும் சலுகைகளை மாநிலம் ஒடிசா வழங்குகிறது.

* உற்பத்தித் தொழில்கள், ஸ்க்ராப்பிங் போன்றவற்றுக்கான நிதி ஊக்கத்தொகைகள்

* எலெக்ட்ரிக் வாகன கடன்களுக்கான வட்டி மானியம்

* 15% மானியம்: அடிப்படை விலையில் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.5,000, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50,000 வரை மானியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: