ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..

கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Car Loan : அதிக கிரெடிட் ஸ்கோர் சிறந்த வட்டி விகிதத்தில் கார் லோனை பெற உதவும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

லோன் எடுத்து புதிய கார் வாங்க வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் ஆசையா.? உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானம் கார் கடனுக்கான தகுதி அளவுகோல்களுடன் பொருந்தினால் புதிய காரை லோனில் நீங்கள் எளிதாக வாங்கி விட முடியும். எனினும் உங்கள் கார் லோனை நீங்கள் புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இது கடன் அனுபவத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மற்றும் பணத்தைச் சேமிக்க உதவும். கார் லோனை வாங்கும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்..

வட்டி வீதம்:

கார் லோனுக்கான வட்டியை தீர்மானிக்கும் காரணிகளில் உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம், கடன் காலம், கார் வகை/மாடல், டவுன் பேமெண்ட் போன்றவை அடங்கும். கார் கடனுக்கான வட்டி 6.75% முதல் 9% வரை மாறுபடும். குறைந்த வட்டி வீதத்தை பெற விரும்பினால், ஆன்லைனில் கிடைக்கும் அனைத்து கார் லோன் ஆஃபர்களையும் ஒப்பிட்டு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவோரை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கவும்:

அதிக கிரெடிட் ஸ்கோர் சிறந்த வட்டி விகிதத்தில் கார் லோனை பெற உதவும். எனவே, கார் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து கொள்ளுங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கும் போது நீங்கள் கார் லோனுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உள்ள கடனை திருப்பிச் செலுத்துவதும், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை (credit utilisation ratio) குறைப்பதும் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும்.

கடன் திருப்பி செலுத்தும் காலத்தை சரியாக முடிவு செய்யுங்கள்:

நீண்ட கடன் திருப்பி செலுத்தும் காலம் குறைந்த EMI அமவுண்ட்டை செலுத்த உதவும் என்றாலும் உங்கள் மொத்த கடன் தொகைக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். EMI மூலம் சற்று அதிக தொகையை செலுத்த உங்களால் முடியும் என்றால். குறுகிய கால அவகாசத்தை தேர்வுசெய்வது சிறந்தது. அதிக EMI அமவுண்ட்டை செலுத்துவது உங்களால் முடியாதென்றால் அப்போது நீண்ட கால கடன் திருப்பி செலுத்தும் வாய்ப்பு உதவும்.

also read : குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

கார் லோனுக்கான பிற கட்டணங்கள்:

லோன் வழங்கும் சில நிறுவனங்கள் கார் கடனுக்கு குறைந்த வட்டியை வசூலித்தாலும், ப்ராசஸ் கட்டணங்கள் மற்றும் கார் கடனுடன் தொடர்புடைய பிற கட்டணங்களை அதிகமாக வசூலிக்கலாம். எனவே குறைந்த வட்டி விகிதத்துடன் குறைந்தபட்ச கட்டணங்களை வசூலிக்கும் கடன் வழங்குநர்களை தேர்வு செய்ய வேண்டும்.

நெகிழ்வுத்தன்மை:

உங்கள் கார் லோனை கடன் காலத்திற்கு முன்னதாகவே முடிக்க விரும்பினால், நீங்கள் கார் கடன் வழங்குபவரை தேர்வு செய்யும் போது, ப்ரீ பேமென்ட் அல்லது ப்ரீ-க்ளோஸருக்கு ஏதேனும் கட்டணம் விதிக்கிறார்களா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து குறைந்த கட்டணம் விதிப்போரிடம் லோன் வாங்குங்கள்.

கடன் தொகைக்கான தகுதி:

லோனுக்காக தகுதி மற்றும் டவுன் பேமென்ட் தேவைகள் ஒவ்வொரு கடன் வழங்குனருக்கு இடையில் மாறுபடலாம். சில சந்தர்ப்பங்களில் சில கடன் வழங்குநர்கள் கார் விலையில் 100% கூட லோன் வழங்க கூடும். எனவே உங்களுக்கு வசதிப்படும் டவுன் பேமென்ட்டுடன் கூடிய கார் லோன் வழங்குபவரை தேர்வு செய்யவும்.

also read : எஸ்பிஐ மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிடைக்கும் சலுகைகள் இதுதான்!

லோன் அக்ரிமெண்டின் ஃபைன் பிரிண்ட்டில் கவனம்:

தவறான லோன் ப்ராடக்ட்டில் சிக்கி கொள்வதை தவிர்க்க விரும்பினால் லோன் அக்ரிமெண்டின் ஃபைன் பிரிண்ட்டை கவனமாக படிக்கவும்.

கார் கடனுக்கான மாற்று:

வங்கிகள் கூறும் கார் கடன் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் சில மாற்று வழிகள் இருக்கலாம். கார் வாங்குவதற்கான பணத்தை ஏற்பாடு செய்ய, பத்திரங்களுக்கு எதிரான கடன்கள், FD-க்கள், தங்கத்தின் மீதான கடன்கள் மற்றும் பிற பாதுகாப்பான கடன் விருப்பங்களை நீங்கள் சரிபார்க்கலாம்.

கடனளிப்பவர் - கார் நிறுவனத்திற்கிடயேயான தொடர்பு:

நீங்கள் ஒரு கார் லோனை இறுதி செய்யும் முன், கார் நிறுவனத்திடம் ஏதேனும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் பிரத்யேக டை-அப் உள்ளதா என விசாரிக்கவும். ஏனென்றால் கார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அடிக்கடி டை-அப் செய்து கொள்கின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் எளிதான விதிமுறைகளில் கடன்களை வழங்கப்படுகின்றன.

First published:

Tags: Car, Loan