ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஆட்டோமொபைல் சரக்கு ரயில் போக்குவரத்தால் அதிகமான வருவாய் - ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ₹10.13 கோடி வருவாய்

ஆட்டோமொபைல் சரக்கு ரயில் போக்குவரத்தால் அதிகமான வருவாய் - ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ₹10.13 கோடி வருவாய்

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம் முன்னெப்போதுமில்லாத வகையில் கடந்த ஆகஸ்ட் 2020-ல் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆகஸ்ட் 2020 இயக்கப்பட்ட 35 சரக்கு ரயில்கள் மூலமாக சென்னை ரயில் கோட்டம், சுமார் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் 2019-ல் 6.41 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக கிடைத்தது.

  கார்களை அதிக அளவு ஏற்றிச்செல்லும் டபுல் டக்கர் வகையில் புதிய வகை பெட்டிகளை கொண்டு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதே சரக்கு போக்குவரத்துத்துடன் வருவாயும் இரட்டிப்பாக காரணம் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...வெறுப்பு பதிவுகள் விவகாரம் - நாடாளுமன்ற நிலைக்குழு முன் பேஸ்புக் அதிகாரிகள் இன்று ஆஜர்

  இந்த புதிய வகை ரயில் பெட்டிகளில் ரெனால்ட் நிசான், ஹூண்டாய் உள்ளிட்ட வகை கார்கள் அதிக அளவு வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Railway