ராகு கேது பெயர்ச்சி | சிறப்பு நேரலை

ராகு கேது பெயர்ச்சி | சிறப்பு நேரலை
ராகு - கேது பெயர்ச்சி
  • Share this:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோவில் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று நடைபெற்று வருகிறது.

ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர் கின்றார்கள். அதையொட்டி தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் ராகு-கேது தளமான திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோவிலில் பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது .

நேற்று மாலை 5 மணி தொடங்கி கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன . தொடர்ந்து இன்று காலை முதல் சிறப்பு யாகம் மற்றும் ராகு கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலபிஷேகம் தயிர் அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது


ராகு கேது பகவான் பெயர்ச்சியின் காரணமாக, ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிட வல்லுனர்கள் கூறியுள்ளனர் .

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி சிறப்பு நேரலை:

இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து திருப்பாம்புரம் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வரும் 14ஆம் தேதி அன்று ஏக தின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்