ஹோம் /நியூஸ் /அரியலூர் /

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

முந்திரிக்காடு வீட்டில் சிறுமியை 10 நாட்கள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: தாயும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

கைதானவர்கள்

கைதானவர்கள்

Ariyalur District News : ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை முந்திரி காட்டில் தனி வீட்டில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கைது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 3 வருடமாக தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், சிறுமி செல்லும் இடமெல்லாம் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.

இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து வந்தாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமி பழிவாங்க வேண்டும் என்று ஜெயக்குமார் சுற்றிவந்துள்ளார். மேலும், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஜெயக்குமார் காத்துக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : தமிழகத்தை மிரட்டப்போகும் ‘மாண்டஸ்’ புயல்... இந்த பெயர் வைக்க என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை கடத்தினார். மேலும், முந்திரி காட்டில் தனி வீட்டில் வைத்து  சிறுமியை அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கடத்தலுக்கு ஜெயக்குமாரின் தாய் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதற்கிடையில், சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சாந்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சினிமாவில் சைக்கோக்களை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்களில் வரும் சம்பவம் போல சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : கலைவாணன் - ஜெயங்கொண்டம்

First published:

Tags: Ariyalur, Crime News, Local News