Home /News /ariyalur /

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு - ஜெயங்கொண்டம் விவசாயிகள் நன்றி

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு - ஜெயங்கொண்டம் விவசாயிகள் நன்றி

ஜெயங்கொண்டம் விவசாயிகள்

ஜெயங்கொண்டம் விவசாயிகள்

Jayankondam : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கடந்த 1996ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கரி அதிக அளவில் இருப்பதால் அனல் மின் திட்டம் தொடங்கலாம் என திட்டமிடப்பட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள மேலூர், கல்லாத்தூர், தேவனூர், கீழகுடியிருப்பு, புதுக்குடி, இலையூர், மருக்காலங்குரிச்சி, தண்டலை உள்ளிட்ட 13 கிராமங்ளில் கடந்த 1996-ம் ஆண்டு 1,210 பேரிடம் 8,370 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் 1,030 ஏக்கர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் தமிழக அரசு ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை திரும்ப தர வேண்டிய அவசியம் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிய விவசாயிகளிடம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிகிறது.

    இந்நிலையில், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன்  என்பவர் பேசுகையில், நிலங்களை திருப்பிக்கொடுத்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் நிலங்களை திருப்பி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இங்குள்ள விவசாய நிலத்திற்கு இலவச மின் மோட்டார் பதிவு செய்ய இலவச மின் இணைப்பு பெற கால அவகாசம் வழங்குமாறும் அரசுக்கு அவர் கோரிக்கை வைத்தார்.

    மேலுர், அப்பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு நிலம் கொடுத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டத்தினை செயல்படுத்தாமலும், நிலங்களை திருப்பி கொடுக்காமலும் இருந்தது தங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூட கடன் பெறவும், மற்ற அரசு உதவி பெறவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது நிலத்தை திருப்பி கொடுக்கும் என்ற உத்தரவு மிக மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    Must Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

    புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் திட்டம் செயல்படுத்தப்படும் நிலத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்தது என்னைச் சார்ந்த அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் முகமலர்ச்சியுடன்.

    செய்தியாளர் - கலைவாணன், ஜெயங்கொண்டம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ariyalur, Farmers

    அடுத்த செய்தி