ஹோம் /நியூஸ் /அரியலூர் /

அரியலூரில் முயல் என நினைத்து பெண் கொலை... சாட்சியாக இருந்த மற்றொரு பெண்ணையும் கொன்ற நபர்...

அரியலூரில் முயல் என நினைத்து பெண் கொலை... சாட்சியாக இருந்த மற்றொரு பெண்ணையும் கொன்ற நபர்...

அரியலூர் - கொலை வழக்கு

அரியலூர் - கொலை வழக்கு

Ariyalur | தீபாவளிக்கு முயல் வேட்டையில் ஈடுபட்ட போது ஒரு புதரில்  காளான்‌ பறிந்த ஒரு பெண்ணை சுளுக்கியால் குத்திய கொலை செய்துள்ளானர். இதனை பார்த்து கத்திய பெண்ணையும் கொலை செய்ததுள்ளானர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ariyalur, India

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய வளையம் கிராமத்தில் காளான் பறிக்க சென்ற மலர்விழி, கண்ணகி என்ற இரண்டு பெண்கள் தைலமரக்காட்டில் நேற்று குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.

  முதல்கட்டமாக கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தீபாவளிக்கு முயல் வேட்டைக்கு சென்ற பால்ராஜ் புதரில் நடுவில் காளான் பறித்து கொண்டு இருந்த நிலையில் முயல் என நினைத்து  சுளுக்கி  ஆயுதம்‌ மூலம் தாக்கி மலர்விழியை கொலை செய்துள்ளார்.

  இதனை பார்த்த கண்ணகி  சத்தம் போட்டு கணவருக்கு போன் செய்துள்ளார். போனை எடுக்காததால் கண்ணகி கொலை கொலை என சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து பால்ராஜ் கண்ணகியையும் கொலை செய்துள்ளார்.

  Also see... அறுபடை வீடுகளில் தொடங்கிய கந்தசஷ்டி விழா! பக்தர்கள் பரவசம்!

  இது ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பால்ராஜ் நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  செய்தியாளர்: கலைவாணன், அரியலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ariyalur, Crime News, Man killed, Muder, Women