ஹோம் /நியூஸ் /அரியலூர் /

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

நகை, பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை.. அரியலூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்..

கொலையான முதியவர்

கொலையான முதியவர்

Ariyalur News : அரியலூரில் நகை மற்றும் பணத்திற்க்காக முதியவர் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (88).  இவர் அக்கிராமத்தில் நாட்டாராக இருந்துள்ளார்.

தன்னுடைய வயலில் ஆர்.எஸ்.பதி போட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது வயலுக்கு வந்தவர் மாலையில் தன்னுடைய வயலில் உள்ள மோட்டார் கொட்டகையில் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். மேலும் அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் முதியவர் கையில் அணிந்திருந்த 2 சவரன் மோதிரம் இல்லை எனவும், அவர் எப்போதும் கையில் 5 ஆயிரம்‌ பணம்‌ வைத்திருப்பார் எனவும் தெரியவந்தது. எனவே, பணம் மற்றும் நகை காணாமல் போனதால் போலீசார் சந்தேகமடைந்தனர். மேலும் விசாரித்ததில் 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் முதியவரை நடுவில் ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள்‌ முதியவரை கொலை செய்து ஏற்றி வந்தார்களா? அல்லது இறக்கி விடும்போது அடித்து கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நகைக்காக முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : கலைவாணன் - அரியலூர்

First published:

Tags: Ariyalur, Crime News, Local News