ஹோம் /நியூஸ் /அரியலூர் /

தேர்வில் மதிப்பெண் குறைவு.. வீட்டுக்கு பயந்து காணாமல்போன சிறுமியை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்!

தேர்வில் மதிப்பெண் குறைவு.. வீட்டுக்கு பயந்து காணாமல்போன சிறுமியை பத்திரமாக மீட்ட ஆட்டோ ஓட்டுநர்!

காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு

காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு

வெளியூருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் மீட்டு பத்திரமாக ஒப்படைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ariyalur | Ariyalur

    அரியலூரில் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியர், பெற்றோருக்கு பயந்து வீட்டை விட்டு காணாமல் போன 13 வயது சிறுமியை பத்திரமாக மீட்டு வந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவரது 13 வயது மகள் அப்பகுதியை சேர்ந்த தெரசா பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

    இந்நிலையில் நேற்று காலையில் பள்ளி வேனில் பள்ளிக்கு  வந்த மாணவியை‌ வகுப்பில் காணவில்லை என அதிர்ச்சியடைந்த ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெற்றோரிடம் விசாரித்ததில் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், மாணவி நேற்று காலை8.50 மணிக்கு தனியாக வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், பள்ளி சீருடையில் மாணவி இருந்தால் அழைத்து வர சொல்லி அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் போலீசார் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ALSO READ | 5 மாத கர்ப்பிணி தீ வைத்து கொலை.. கணவர் குடும்பமே கூண்டோடு கைது - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

    இதனையடுத்து செந்துறை பேருந்து நிலையம்  அருகே வெளியூர் செல்ல நின்று கொண்டிருந்த மாணவியை கண்ட ஆட்டோ ஓட்டுனர்  சக்திவேல் அவரை பேசி அழைத்து சென்று பள்ளியில் விட்டுள்ளார்.

    இதையடுத்து மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் திட்டுவதாக எண்ணி அச்சத்தில் வெளியூர் செல்ல சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து மாணவிக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    செய்தியாளர்: கலைவாணன், அரியலூர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Ariyalur, School student