முகப்பு /செய்தி /அரியலூர் / டியூசன் டீச்சர் செல்போனுக்கு வந்த ஆபாச அழைப்பு - மர்மநபரை கைது செய்த போலீஸ்

டியூசன் டீச்சர் செல்போனுக்கு வந்த ஆபாச அழைப்பு - மர்மநபரை கைது செய்த போலீஸ்

ஜெயக்கொண்டம் - கைதானவர்

ஜெயக்கொண்டம் - கைதானவர்

Ariyalur | ஜெயங்கொண்டம் அருகே அபாகஸ் டியூசன் ஆசிரியையிடம் போனில் ஆபாசமாக பேசிய வரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஸ்டேட் பேங்க் காலனியில் வசிக்கும் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளி சிறுவர்களுக்கு அபாகஸ் கிளாஸ் எடுத்து வருகிறார். திருமணமான இவர் கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதனை அறிந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்புக் கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்  மர்மநபரின் செல்போன் பேச்சு குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து  அந்தப்பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த  மர்ம நபர் குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

ஆசிரியைக்கு வந்த செல்போன் அழைப்பை கொண்டு மர்ம நபரின் மொபைல் எண்ணை போலீஸார் ட்ரேஸ் செய்தனர். விசாரணையில் ஆசிரியையிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய நபர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது.

Also see... முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி...

இதனையடுத்து கடாரம் கொண்டான் கிராமத்துக்கு விரைந்த போலீஸார் கண்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Ariyalur, Sexual harassment