அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஜாஃபர் கறி வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மும்பையை சேர்ந்த ரியாஸ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் உடையார்பாளையத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.
ஜெயங்கொண்டத்தில் வேலை செய்து வந்த ஜாபர் தினமும் உடையார்பாளையத்தில் இருந்து சென்று வந்துள்ளார். இதனால் ஜெயங்கொண்டத்திலேயே வீடு வாடகைக்கு எடுத்து அங்கே மனைவியை அழைத்து சென்று சில நாட்கள் தங்கியுள்ளார். ஆனால் மனைவி ரியாஸ் ஜெயங்கொண்டத்தில் உள்ள வீட்டில் தங்காமல் உடையார்பாளையம் வீட்டிற்கு வந்து விட்டார். ஜாஃபர் தனது மனைவியை ஜெயங்கொண்டத்திற்கு வந்து தன்னுடன் வசிக்குமாறு பலமுறை அழைத்தும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Also Read : கோவையில் பாஜக பந்த் நடத்தினால் நடவடிக்கை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெயங்கொண்டம் வீட்டில் கழிவறை மற்றும் குளியலறை கட்டிக்கொடுத்தால் அங்கு வந்து உன்னுடன் வசிக்கிறேன். அதைக் கட்டிவிட்டு என்னை அழைக்க வா... அப்போது நான் வருகிறேன்... என ரியாஸ் கூறியுள்ளார். வியாழக் கிழமை இரவில் மது அருந்துவிட்டு போதையில் இருந்த ஜாஃபர் மனைவியிடம் சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அவர் வர மறுக்கவே மாடு வெட்டும் கத்தியை வைத்து மனைவியை வயிறு மற்றும் கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். மனைவியை கொன்று விட்டதை அறிந்த ஜாபர் மனைவியின் உடல் அருகே படுத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார். போலீசார் வரும்வரை அதே இடத்தில் இருந்து அழுது கொண்டிருந்த ஜாபரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் : கலைவாணன், அரியலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur, Crime News