தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால் அதை கெடுக்கலாமா என சிலர் சதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 279 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, 31 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ஒன்பதாயிரத்து 621 பயனாளிகளுக்கு 26 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு... எழுத்தருக்கு ஷாக் கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு
விழாவில் பேசிய முதலமைச்சர் எங்கு திரும்பினாலும் கனிம வளங்கள், பொக்கிஷங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டம் அரியலூர். அரியலூரில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கி, தொல்லியல் துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கி உள்ளோம் என தெரிவித்தார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதைபடிம பூங்கா அமைக்கப்படும். அரியலூர் போன்றே பெரம்பலூர் மாவட்டத்திலும் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பின் தங்கிய மாவட்டம் என எதுவும் இருக்கக்கூடாது என்ற இலக்குடன் உழைக்கிறோம். மக்கள் நலம் ஒன்றையே சிந்தையில் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது? ஒரு முதலமைச்சர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்தகால ஆட்சி. தனது கையிலே அதிகாரம் இருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது கடந்த ஆட்சி என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கையாலாகத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள் தான் இப்போது இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார் கொடுக்கிறார்கள் என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது. சிலர் ஆபத்து ஆபத்து என்று அலறிக்கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறிய அவர், விமர்சனங்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும், விமர்சனங்களைதான் வரவேற்பதாகவும் விஷமத்தனம் கூடாது எனவும் தெரிவித்தார்,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur, CM MK Stalin, Edappadi Palaniswami, MK Stalin