முகப்பு /செய்தி /அரியலூர் / செருப்பால் அடித்த மாமனார்.. தீக்குளித்த மருமகள்.. அரியலூரில் விபரீதம்

செருப்பால் அடித்த மாமனார்.. தீக்குளித்த மருமகள்.. அரியலூரில் விபரீதம்

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

தீ காயங்களுடன் இளம் பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இது தற்கொலை முயற்சியா அல்லது கொலை முயற்சியா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் அருகே மாமனார் செருப்பால் அடித்து தாக்கியதாலும் தொடர்ந்து குடும்ப வன்முறையை நிகழ்த்தி வந்ததாலும் மருமகள் தன் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ் மற்றும்  அபிராமி  தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். அபிராமி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தையை அடித்துள்ளார்.

இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியை திட்டி உள்ளனர். மேலும் அபிராமியின் கணவர் விஜய் பிரகாசும் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடலில் தீவைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த  அபிராமி தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட தகராறில் அபிராமியை மாமனார் கலியமூர்த்தி செருப்பால் அடித்து மண்ணெண்ணையை அபிராமி மீது ஊற்றியதாக அபிராமி தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையிலிருந்தவாறே வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கலியமூர்த்தியை கைது செய்தனர். மேலும், அபிராமி தற்கொலைக்கு முயற்சித்தாரா அல்லது மாமனார் கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: கலைவானன் - அரியலூர்

    First published:

    Tags: Ariyalur, Domestic Violence