அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை கடந்த பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதனை அடுத்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை குருவாலப்பர் கோவிலில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிராம பொதுமக்கள் முடிவு செய்து, அறநிலையத்துறையில் உரிய அனுமதி பெற்று விழாவிற்காக பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நடராஜர் சிலை ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து கிராம மக்கள் சார்பில் நடராஜருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து நடராஜர் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வீதி உலா முடிந்தபின் மீண்டும் நடராஜர் சிலை குருவாலப்பர் கோவில் பாதுகாப்பு பெட்டகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
மேலும் செண்டை மேளங்கள் முழங்க நடராஜர் முக்கிய வீதியில் வழியாக பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: கலைவாணன், அரியலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur