முகப்பு /செய்தி /அரியலூர் / திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை... அரியலூர் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

கைதானவர்

கைதானவர்

Ariyalur News : அரியலூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்‌ செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சாத்தனப்பட்டு  கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட ஆனந்தராஜ் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர்‌ அந்த பெண்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் நாளடைவில் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஆனந்தராஜ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியபோது ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து தன்னை தொந்தரவு செய்தால் தீர்த்துகட்டிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் தனது வீட்டில் இதுகுறித்து தெரிவித்து கதறி அழுதார். இதையடுத்து, இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஆனந்தராஜின் வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால் 2  குடும்பத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 2019ம்‌ ஆண்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை அரியலூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றாளி ஆன்ந்தராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும் இளம் பெண்ணுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம்‌ அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்திரவிட்டார்.

செய்தியாளர் : கலைவாணன் - அரியலூர்

First published:

Tags: Ariyalur, Crime News, Local News