ஹோம் /நியூஸ் /அரியலூர் /

5 மாத கர்ப்பிணி தீ வைத்து கொலை.. கணவர் குடும்பமே கூண்டோடு கைது - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

5 மாத கர்ப்பிணி தீ வைத்து கொலை.. கணவர் குடும்பமே கூண்டோடு கைது - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூர் கொலை சம்பவம்

அரியலூர் கொலை சம்பவம்

Ariyalur News: கர்ப்பிணி பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் அவரது வாக்குமூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ariyalur, India

  அரியலூரில் 5 மாத கர்ப்பிணி தீவைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன், மாமனார் மற்றும் மாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். இவர் அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

  5 மாத கர்ப்பிணியாக அபிராமி கடந்த 3 ஆம் தேதி  வீட்டில் சமைக்க மீன் கழுவியதாவும் அப்போது தண்ணீரில் விளையாடிய மகனை அடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் மாமனார் கலிய மூர்த்தி,  மாமியார் வசந்தா திட்டியுள்ளனர். இதனை கணவரிடம் கூறியதாகவும் கணவனும் அபிராமியை அடித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

  இந்நிலையில் 95 சதவீதம் தீக்காயத்துடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அபிராமி அவரது அம்மாவிடம் நடந்ததை கூறியுள்ளார். அதில் அபிராமியின் அம்மா பார்வதி  போலீசாரிடம் அபிராமியின் வாக்கு மூலத்தை கூறினார்.

  Also Read: நெய்மர் ஃபேன் டா..! - ஃபுட் பால் ஆடுவதாக பஸ் மீது பாய்ந்து கண்ணாடி உடைத்து இளைஞர் அட்டகாசம்

  அதில் மாமனார் கலியமூர்த்தி மண்ணெண்ணையை அபிராமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அபிராமியின் உடல் எரிந்துள்ளது. இதனை பார்த்த அவரது கணவன்  விஜய் பிரகாஷ் சாக்கை எடுத்து அபிராமி மீது போட்டு தீயை அணைத்துள்ளார்.

  என வாக்கு மூலம் கொடுத்தார்.

  இதனையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி  மாமனார் கலியமூர்த்தியை மீன்சுருட்டி போலீசார்‌  கைது செய்தனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த அபிராமி சிகிச்சை பலனின்றி  உயிரிந்தனர். இதனையடுத்து அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷை  கடந்த 7 ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் மாமியார் வசந்தாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Murder, Pregnant