முகப்பு /செய்தி /அரியலூர் / கோலி - ரோஹித்தை திட்டியதால் கொன்றேன் - இளைஞர் கொலையில் நண்பர் பகீர் வாக்குமூலம்

கோலி - ரோஹித்தை திட்டியதால் கொன்றேன் - இளைஞர் கொலையில் நண்பர் பகீர் வாக்குமூலம்

அரியலூர் கொலை

அரியலூர் கொலை

அரியலூர் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நண்பரின் அதிர்ச்சி வாக்குமூலம்.

  • Last Updated :
  • Ariyalur | Ariyalur

இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா விராட்கோலியை திட்டிய நண்பனை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். ஐடிஐ படித்துள்ள விக்னேஷ் சென்னையில் பணியாற்றி வந்த நிலையில் தனது வெளிநாட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்கான டெஸ்டு எடுத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு விக்னேஷின் நண்பரான பிரபாகரன் போன் செய்து அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ஊருக்கு வெளியில் விக்னேஷ் தலையில் காயம்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இந்த தகவல் காட்டுத்தீப்போல பரவ அக்கம்பக்கத்து கிராமத்தினர் அங்கு குவிந்தனர். விக்னேஷின் பின் தலையில் அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த கீழ்ப்பழுவூர் போலீஸார் அங்கு விரைந்தனர். உயிரிழந்த விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரபாகரன், விக்னேஷ், இவர்களின் நண்பர்களான தர்மராஜ் மூவர் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளனர். 3 பேரும் மது அருந்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் தர்மராஜ் மீண்டும் விக்னேஷை அழைத்துக்கொண்டு மது அருந்த சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் தர்மராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தர்மராஜ் தந்தை லோன் ஆப்பில் வாங்கிய கடனை கட்டுவதற்காக ரூ.2500 கொடுத்துள்ளார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற தர்மராஜ் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். பிரபாகரன் வீட்டுக்கு சென்ற நிலையில் தர்மராஜ் மற்றும் விக்னேஷ் மது அருந்தியுள்ளனர். தர்மராஜ் கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். சரளமாக பேச வராது.

Also Read: என் கூட வாங்க நல்லா காசு பார்க்கலாம்.. நரபலிக்காக விரித்த வலை - வெளியாகும் அதிர்ச்சி தகவல்

மதுபோதையில் விக்னேஷ் உன்னைப்போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

    First published:

    Tags: Ariyalur, Cricket, Crime News, Murder