ஹோம் /நியூஸ் /அரியலூர் /

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடுரோட்டில் லாரியை நிறுத்தி மது அருந்தும் ஓட்டுநர்கள்...அதிகரிக்கும் விபத்துகள்...நடவடிக்கை எடுக்கப்படுமா?

மது அருந்திவிட்டு லாரியை இயக்கும் ஓட்டுநர்

மது அருந்திவிட்டு லாரியை இயக்கும் ஓட்டுநர்

Ariyalur News | சாலையில் லாரிகளை நிறுத்திவிட்டு மது அருந்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் தொடர் விபத்துக்களும் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகள்  அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இதில் கயர்லாபாத் என்ற இடத்தில் அரசு சிமெண்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி  செல்வதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் லாரியில் சிமெண்ட் மூட்டைகளை  ஏற்றிக்கொண்டு சாலையில் லாரியை நிறுத்திவிட்டு மதுபான கடைக்கு செல்கின்றனர்.

அவ்வாறு லாரிகளை நிறுத்திச் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் சுமார் அரை மணி  வரை மது அருந்திவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு இயக்கிச்  செல்வதன் மூலம் சமீப காலங்களில் லாரிகளால் இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். லாரி ஓட்டுனர்களை இரவு நேரங்களில் மது அருந்தி இருக்கிறார்கள் என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும்  அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அரியலூர் மாவட்டத்தில் இதேபோன்று ஆங்காங்கே லாரியை நிறுத்திவிட்டு மது அருந்தச் செல்வது வாடிக்கை ஆகிவிட்டதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் லாரி ஓட்டுனர்களிடம் கேட்கும்போது கோபமாக பேசுவது வாடிக்கையாகி விட்டதாகவும்  வேதனையாக கூறுகின்றனர். இது குறித்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க்க வேண்டும் என்றும் மது அருந்திவிட்டு லாரி ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்குகின்றனரா  என்பதை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Ariyalur, Drunk an drive