முகப்பு /செய்தி /அரியலூர் / உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

பறவைகளை வேட்டையாடிய மூன்று பேர் கைது

பறவைகளை வேட்டையாடிய மூன்று பேர் கைது

Ariyalur Bird Hunters Arrest | 3 பேரை கைது செய்த காவல்துறையினர் 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் அவர்கள் வேட்டையாடிய 4 பறவைகளை பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூரில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து    குற்ற நுண்ணறிவு பிரிவு காவலர்கள் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகள் வேட்டையாடிய மூன்று பேரை கைது  செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன்,  சுபாஷ்,  பாபு என்பதும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை ஆய்வு செய்தபோது உரிமம் இல்லாமல்  பயன்படுத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த தா.பழூர் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 2 ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி மற்றும் அவர்கள் வேட்டையாடிய 4 பறவைகளை பறிமுதல் செய்த அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர்: கலைவாணன்

First published:

Tags: Ariyalur, Crime News, Local News