Home /News /ariyalur /

நீட் தேர்வு அச்சம்.. அரியலூரில் மாணவி தற்கொலை

நீட் தேர்வு அச்சம்.. அரியலூரில் மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

இந்தியா முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூரில் நீட் தேர்வு  காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் இரயில்வே குடியிருப்பு பின்புறத்தில் வசிக்கும் தம்பதி நடராஜன், உமாராணி. இவர்களது மகள் நிஷாந்தி, பன்னிரண்டாம் வகுப்பில் 529.5 மதிப்பெண் பெற்றார்.  கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்ற மாணவி நிஷாந்தி தோல்வி அடைந்தார். எனினும் எப்படியாவது மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வுக்கு மாணவி தயார் ஆகி வந்தார்.

    இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக இருந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது கடிதத்தில்,  தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து ஊரிலேயே இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: சாதி ரீதியிலான வினா.. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ்

    நிஷாந்தி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய அரியலூர் காவல்துறை ஆய்வாளர் கோபிநாத், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.  இந்திய முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூர் மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கலைவாணன்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ariyalur, Neet Exam

    அடுத்த செய்தி