முகப்பு /செய்தி /அரியலூர் / பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

பஸ் ஓட்டிக்கொண்டே செல்போனுக்கு சார்ஜ்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 52 பேர் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

Ariyalur Bus Accident | காயமடைந்த  34 பேர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமணையிலும்,  18 பேர் செந்துறை மருத்துவமனையில் சிகிச்சை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூரில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் கல்லூரி மாணவன்‌ உயிரிழந்த நிலையில் 52 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பேருந்து இன்று காலை புறப்பட்டது.

பேருந்து செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது  சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்தோர் 52  பேர் காயமடைந்தனர்.

காலை நேரத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகமாக பயணம்  செல்லும் சூழ்நிலையில் பேருந்து விபத்து என்று கேள்விப்பட்டவுடன் இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துஹையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இதில் கார்த்திக் என்ற கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 52 பேர் காயங்களுடன் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் காயமடைந்த  34 பேர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமணையிலும்,  18 பேர் செந்துறை மருத்துவ மணையிலும்‌ சிகிச்சை, இதில் ஒருவர்‌ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மணைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக சென்று கொண்டே செல்போனில் பேசிக்கொண்டு பேருந்தை ஓட்டியதும் பின்னர்  அந்த செல்போனுக்கு சார்க் போடும்போது பேருந்து கட்டுபாட்டை இழந்து விபத்தை ஏற்பட காரணம் என விபத்தில் காயமடைந்த பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

First published:

Tags: Ariyalur, Local News