முகப்பு /செய்தி /அரியலூர் / 10-ம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர்.. கணக்கு வாத்தியார் அட்டகாசம் - போக்சோவில் கைது

10-ம் வகுப்பு மாணவிக்கு லவ் டார்ச்சர்.. கணக்கு வாத்தியார் அட்டகாசம் - போக்சோவில் கைது

ஆசிரியர்

ஆசிரியர்

மாணவியை பள்ளியில் இருந்து இடையில் நிறுத்தி விட்ட பிறகும் தொடர்ந்து ஆசிரியர் மாணவியை போனில் தொடர்பு கொண்டு தொல்லை அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Ariyalur

அரியலூரில், பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித  ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது  சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் இருந்து இடையில் நிறுத்தி விட்டனர்.

ALSO READ | கருமாரியம்மன் கோவிலில் தேர் இழுத்த அமைச்சர் நாசர்...

இருந்தபோதிலும் தினேஷ் தொடர்ந்து போனில் மாணவியை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் , ஆசிரியர் தினேஷ் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், போலீசார், தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

First published:

Tags: Ariyalur, Child harassment, Crime News, Pocso, Teacher