முகப்பு /செய்தி /அரியலூர் / 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை முயற்சி : காதல் கணவர் திட்டியதால் விபரீத முடிவு

5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை முயற்சி : காதல் கணவர் திட்டியதால் விபரீத முடிவு

தீ வைத்துக்கொண்ட பெண்னின் கணவர்

தீ வைத்துக்கொண்ட பெண்னின் கணவர்

Ariyalur | காதல் கணவர் திட்டியதால் கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டது அரியலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட  5 மாத கர்ப்பிணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். இவர் அபிராமி என்ற  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று அபிராமி வீட்டில் சமைப்பதற்காக மீன் கழுவியதாவும் அப்போது தண்ணீரில் விளையாடிய மகனை அடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாமனார், மாமியார் அபிராமியை திட்டியுள்ளனர்.

இதனை கணவனிடம் அபிராமி கூறியுள்ளார். அதற்கு கணவன் அபிராமியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். தற்போது 95 சதவீதம் தீக்காயத்துடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Also see... கோவை கார் வெடிப்பு வழக்கில் புதிய தகவல்கள்..

காதல் திருமணம் என்பதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் விஜய பிரகாஷிடம் மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Ariyalur, Pregnancy, Suicide attempt