முகப்பு /செய்தி /அரியலூர் / பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

பெட்ரோல் திருட்டு.. இளைஞரை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் - அரியலூரில் அரங்கேறிய கொடுமை

இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கு காட்சி

இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கு காட்சி

Ariyalur News: பெட்ரோல் திருடியதாக இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் பெட்ரோல் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ வைரலான நிலையில் அவரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சேலத்தான் காடு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் திருட்டு வழக்கில்  சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில் சந்திரா பாளையத்தை சேர்ந்த சகாதேவன் என்பவரது இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரம் இருக்கும் பெட்ரோல், காலை பார்க்கும்போது மாயமாகிவிடுகிறது.

இதனை கண்டுபிடிக்க சகாதேவன் விழித்திருந்து பார்த்தபோது தனுஷ் என்பவர் 2 சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் தனுஷை மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர். இது குறித்த வீடியோவை தனுஷின் சித்தப்பா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து தனுசை கொலை முயற்சியுடன் தாக்கிய வழக்கில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் சகாதேவன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

First published:

Tags: Ariyalur, Local News, Petrol, Theft