அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்தவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் தேதி (11.08.2021) அதே கிராமத்தைச் சேர்ந்த, தனது வீட்டின் அருகே வசிக்கும் 10ஆம் வகுப்பு மாணவியின் வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார்.
அங்கே வீட்டில் தனியாக இருந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிச்சியடைந்த அந்த மாணவி, தனது தாய் வீட்டிற்கு வந்ததும் இது குறித்து அவரிடம் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைக் கேட்டு அதிச்சியடைந்த மாணவியின் தாய் 1098 பெண்கள் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து, புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Must Read : கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!
இது குறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ராஜசேகருக்கு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூபாய் 30ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
செய்தியாளர் - கலைவாணன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ariyalur, Judgement, POCSO case, Sexual harassment