தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 7,515 கோடி முதலீடு செய்ய திட்டம்: 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்..

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில், சுமார் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 7,515 கோடி முதலீடு செய்ய திட்டம்: 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்..
ஃபாக்ஸ்கான் நிறுவனம்
  • Share this:
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில், சுமார் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பதூர் தொழிற்சாலையில்தான், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மாடல் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் மேலும், 7500 கோடியை முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக 6000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா வர்த்தக போரால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் படி, கொஞ்சம் கொஞ்சமாக, சீனாவில் இருந்து ஆப்பிள் போன் தயாரிப்பை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. . சீனாவின் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செல்போன்களுக்கான பாகங்கள் இங்கு தயாரிக்கப்படும்.7500 கோடி ரூபாய்க்கு முதலீடு வரும் போது, இதனால் சுமார் 6000 பேருக்கு வேலை கிடைக்கும்.செல்போன் பாகங்கள் தயாரிக்க, சீனாவிற்கு செல்ல கூடிய ஆடர்கள் இனி சென்னை, ஸ்ரீபெரும்பதூர் ஆலைக்கு வரும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஐஃபோன்கள் அதிக அளவில் இந்தியாவில் தயாரிக்கப்படும். இதன் காரணமாக இந்தியாவில் ஐபோன்களின் விலை குறையும் நிலை உருவாகும். இனி வரும் காலங்களில் உலக நாடுகளுக்கு ஆப்பிள் ஃபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் திட்டமும் இருப்பதாக தெரிகிறது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories