இன வெறுப்புக்கும், வெறுப்புணர்வுக்கும் மிகக் கடுமையான தண்டனை தரப்படவேண்டும் - அனுஷ்கா ஷர்மா

நடிகர் மெய்யங் சாங் காலையில் ஜாகிங் செல்லும்போது, அவரைப் பார்த்து ’கொரோனா’ என கத்தி வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன வெறுப்புக்கும், வெறுப்புணர்வுக்கும் மிகக் கடுமையான தண்டனை தரப்படவேண்டும் - அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா சர்மா
  • Share this:
கொரோனா வைரஸ் என்னும் உலகளாவிய பெருந்தொற்று நேரத்திலும் கூட நிகழ்த்தப்படும் இன வெறுப்புக்கும், வெறுப்புப் பேச்சுக்கும் மிகக் கடுமையான தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான அனுஷ்கா ஷர்மா.

மணிப்பூர் மாணவி ஒருவர் மீது சீனரைப் போல இருப்பதாக, இன வெறுப்புடன் ஒருவர் எச்சில் துப்பிய செய்திகள் வெளியாகின. அதைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள அனுஷ்கா ஷர்மா, “இந்த நேரத்திலும் கூட இன வெறுப்பையும், வெறுப்புணர்வையும் கொண்டிருப்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும். தவறு இழைக்கும் மிகச்சிலரால் இந்தியர்களைப் பிரித்துவிட முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக சீன வம்சாவளியை உடைய நடிகர் மெய்யங் சாங் காலையில் ஜாகிங் செல்லும்போது, அவரைப் பார்த்து ’கொரோனா’ என கத்தி வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories